வேலைவாய்ப்புகளை அள்ளி வீசுவதில் குஜராத் முதல் இடம்.. அப்ப தமிழ்நாடு??

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காந்திநகர்: இந்தியாவில் கடந்த 12 வருடங்களாக வேலைவாய்ப்புகளை அதிகளவில் வழங்குவதில் குஜராத் முதல் இடத்தில் உள்ளதாக அம்மாநிலத்தின் நிதியமைச்சர் சவுரவ் பட்டேல் தெரிவித்தார். மேலும் இந்த தகவல் மத்திய அரசு வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்ட அறிக்கையில் வெளியிடப்பட்டது.

 

இதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் அதிக வளர்ச்சி கண்ட மாநிலங்களில் குஜராத் மாநிலம் டாப் 5 இடங்களில் ஒன்றாக உள்ளது.

எம்பிளாய்மென்ட் எக்ஸ்சேஞ்ச்

எம்பிளாய்மென்ட் எக்ஸ்சேஞ்ச்

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் "எம்பிளாய்மென்ட் எக்ஸ்சேஞ்ச் புள்ளிவிபரம் 2013" என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் 2012ஆம் எம்பிளாய்மென்ட் எக்ஸ்சேஞ்ச் மூலம் இந்தியாவில் சுமார் 4.27 இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் குஜராத்தில் மட்டும் 2.46 இலட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெற்றி... 50 சதவீதம்

வெற்றி... 50 சதவீதம்

மொத்த இந்தியாவில் குஜராத் மாநிலம் மட்டும் சுமார் 57.53 சதவீதம் வேலைவாய்ப்புகள் எம்பிளாய்மென்ட் எக்ஸ்சேஞ்ச் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. இது மற்ற மாநிலத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு.

நம்பர் ஒன்..
 

நம்பர் ஒன்..

கடந்த 2002ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை இந்தியாவில் அதிகளவில் வேலைவாய்ப்பு அளித்ததில் குஜராத் மட்டுமே தொடர்ந்து முதல் இடத்தை பிடித்து வருகிறது. மற்ற மாநிலங்கள் எம்பிளாய்மென்ட் எக்ஸ்சேஞ்ச் என்ற ஒன்றை பயன்படுத்திகிறார்களா என்பதே சந்தேகமே. (குறிப்பாக தமிழ்நாடு.. கடந்த 5 வருடத்தில் எத்தனை பேருக்கு எம்பிளாய்மென்ட் எக்ஸ்சேஞ்சில் இருந்து கடிதமோ அல்லது அழைப்போ வந்திருக்கும்??)

பெண்கள்

பெண்கள்

அதிக வேலைவாய்ப்பு அளிப்பது மட்டும் அல்லாமல் குஜராத் அரசு பெண்களுக்கு முக்கியதுவம் அளித்து அவர்களுக்கு அதிகளவில் வேலை வாய்ப்பை அளித்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gujarat No 1 in providing employment for 12th successive year

Referring to a recent report on the country's employment scenario, Gujarat Finance minister Saurabh Patel today said the state has been ranked number one in providing employment for the 12th successive year.
Story first published: Tuesday, July 15, 2014, 16:02 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X