உணவு பொருட்களின் விலை தாறுமாறாக உயர்வு.. நடுத்தர மக்களின் நிலை??

டெல்லி: கடந்த ஒரு மாத காலமாக உணவு பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதனால் நடுத்தர மற்றும் கீழ்தட்டு மக்கள் அதிகளவில் பாதிப்படைந்துள்ளனர். குறிப்பாக கடந்த வாரம் 40 ரூபாயாக இருந்த ஒரு கிலோ தக்காளி, தற்போது 60 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் சில மாதங்களுக்கு முன்பு வெங்காயம் 100ரூபாய் வரை உயர்ந்தது குறிப்பிடதக்கது, இதனால் வடமாநிலங்களில் சில இடங்களில் வெங்காய திருட்டுக் கூட நடந்தது.

வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கின் விலையை குறைக்கவும் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு, அண்டை நாடுகளிடம் இருந்து அதிகளவில் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கை இறக்குமதி செய்தது. உணவு பொருட்களின் விலை உயர்வு இந்தியாவில் மட்டும் அல்ல உலக நாடுகளிலும் இதே நிலையை தான் சந்தித்து வருகிறது. மேலும் இன்னும் சில நாட்களில் உணவு பொருட்களின் விலை குறைய அதிகளவில் வாய்ப்பு உள்ளது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியாக சென்னையில் காய்கறியின் விலையில் ஒரு சிறு தாக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

50 சதவீத விலை உயர்வு

50 சதவீத விலை உயர்வு

பணவீக்கத்தின் காரணமாக இந்தியாவில் உணவு பொருட்களின் விலை 50 சதவீதம் வரை உயர்வை சந்தித்துள்ளது. இதே நிலையில் கொரியா மற்றும் சீனாவில் 14 சதவீதம் மற்றும் 32 சதவீதம் மட்டுமே உயர்வை சந்தித்துள்ளது.

இந்தியாவில் உணவு பணவீக்கம்..

இந்தியாவில் உணவு பணவீக்கம்..

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் உணவு பொருட்களின் உற்பத்தி கணிசமாக குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது குறைவான பருவ மழை, விவசாயிகளுக்கு குறைவான மானியம் மற்றும் ரியல் எஸ்டேட். இதில் ரியல் எஸ்டேட்டின் பங்கு மிக அதிகம் என்று சொன்னால் மிகையாகது, குறிப்பாக தமிழ்நாட்டில். இந்தியாவில் 2012ஆம் ஆண்டு உணவு பணவீக்கம் 10.2 சதவீதமாக இருந்தது, அதேபோல் 2013ஆம் ஆண்டில் 9.5 சதவீதமாக இருந்தது.

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

பொருளாதாரம் மற்றும் வாழ்வாதரத்தில் இந்தியாவை விட பின்தங்கிய நாடான பாகிஸ்தான் உணவு பணவிக்கத்தில் 2013ஆம் ஆண்டு 7.4 சதவீதமாகவு, 2012ஆம் ஆண்டில் 11 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடதக்கது.

உலக நாடுகளில்

உலக நாடுகளில்

2013ஆம் நிதியாண்டில் உலக நாடுகளில் உணவு பொருட்களின் மீதான மொத்த விலை பணவீக்கம் சீனாவில் 2.6%, கொரியாவில் 1.3%, இலங்கை 6.9%, இன்தோனேஷியா 6.4%, மலேசியா 2.1% மற்றும் தாய்லாந்தில் 2.2% என்ற அளவில் இருந்தது. இந்த நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் தான் பணவீக்கம் அதிகளவில் உள்ளது.

மத்திய அரசு

மத்திய அரசு

மத்திய அரசு நாட்டில் அதகரித்துள்ள உணவு பணவிக்கத்தின் நிலையை கூர்ந்து கவணித்து வருவதாகவும், அதை மேலும் அதிகரிக்க விடமால் குறைக்கவும் வழிவகை செய்து வருவதாக சில உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய பட்ஜெட் 2014-15

மத்திய பட்ஜெட் 2014-15

பணவீக்கத்தை குறைக்கும் பொருட்டு மத்திய அரசு அறிவித்த பட்ஜெட்டில் இந்தியாவில் இரண்டாம் பசுமை புரட்சியை ஏற்படுத்தும் எண்ணத்துடன் விவசாயத்தை வளம் பெற செய்யவும், உற்பத்தியை பெறுக்கவும் சில முக்கிய திட்டங்களை அறிவித்துள்ளது.

விலை குறைப்பு

விலை குறைப்பு

பசுமை புரட்சி என்பசு நீண்ட கால குறிக்கோள் என்றாலும், உணவு பொருட்களின் விலையை குறைக்கவும், சீர்படுத்தவும் மத்திய அரசு பல தரப்பட்ட முயற்சிகளை செய்து வருகிறது.

ஜூன் 2014

ஜூன் 2014

2014ஆம் ஆண்டு ஜூன் மாத்தில் இந்தியாவில் வாடிக்கையாளர் விலைக் குறியீடு ஒரு மாத சரிவை சந்தித்தது, இதனால் மே மாதத்தில் 8.28 சதவீதமாக இருந்த பணவீக்கம் ஜூன் மாதத்தில் 7.31 சதவீதமாக குறைந்தது. மேலும் உணவு பணவீக்கமும் 7.97 சதவீதமாக குறைந்தது குறிப்பிடதக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+