வரலாற்று சாதனை படைத்த டி.சி.எஸ்!! மகிழ்ச்சியில் பங்குதாரர்கள்

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தனியார் நிறுவனம் டாடா குழுமம். இக்குழுமத்தின் கிளை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்விசஸ் தனது 6 இலட்சம் பங்குதாரர்களுக்கு சுமார் 12,750 கோடி ரூபாயை பங்கு லாபமாக அளித்துள்ளது. இதுவரை எந்த ஒரு இந்திய நிறுவனமும் இத்தகைய பெறும் தொகையை தனது பங்குதாரர்களுக்கும் அளித்ததில்லை என்பது குறிப்பிடதக்கது.

இதன் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனத்தின் இருப்பில் இருந்த, பெரும் தொகையின் 50 சதவீதத்திற்கும் அதிகமான தொகையை பங்குதாரர்கள் பகிர்ந்துள்ளதுள்ளனர். இந்நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரர்ரான டாடா சன்ஸ் நிறுவனம் இதன் மூலம் 9,382 கோடி ரூபாய் பெற்றது. ஜூன் 30ஆம் தேதியின் கணக்கின் படி இந்நிறுவன இருப்பில் ரூ.25,900 கோடி இருந்தது.

(Read this: 6 ways to manage your inherited wealth In India)

பங்கு லாபம்

பங்கு லாபம்

கடந்த வாரம் டிசிஎஸ் நிறுவனம் பங்கு லாபமாக ஒரு பங்கிற்கு 45 ரூபாய் அளிப்பதாக இந்நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரி கோபிநாத் தெரிவித்தார். இதில் டிசிஸ் நிறுவனம் பங்கு சந்தையில் இறங்கி 10 வருடமானதையொட்டி பங்குதாரர்களுக்கான 40 ரூபாய் ஊக்கத்தொகையும் அடங்கும்.

விநியோகம்

விநியோகம்

இந்த 12,750 கோடி ரூபாயை பங்குதாரர்களுக்கு வருகிற ஜூலை மற்றும் ஆகஸ்ட மாதத்தின் மத்தியில் அளிப்பாதாக இந்நிறுவனம் தெரிவித்தது. அதேபோல் 2,200 கோடி ரூபாய் வரியாக பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபிக்கு செலுத்தபடும் எனவும் கோபிநாத் தெரிவித்தார்.

டாடா சன்ஸ்

டாடா சன்ஸ்

டிசிஎஸ் நிறுவனத்தின் 73.69 சதவீத பங்குகளை டாடா சன்ஸ் வைத்துள்ளது, இதனால் இந்த பங்கு லாபம் அளிப்பில் டாடா சன்ஸ் நிறுவனம் மிகப்பெரிய அளவில் லாபம் பெற்றது.

டாடா குழுமம்

டாடா குழுமம்

டாடா சன்ஸ் நிறுவனத்திற்கு டிசிஎஸ் நிறுவனம் ஒரு தங்க முட்டை போடும் வாத்து போன்றது. இந்த தொகையை டாடா குழுமத்தின் டாடா ஸ்டில்ஸ் மற்றும் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகப்படியான கடனை குறைக்கவும் விரிவாக்க பணிகளை மேற்கொள்ளவும் பயன்படுத்த போவதாக டாடா சன்ஸ் நிறுவனத்தி உயர் ஆய்வாளர் தெரிவித்தார்.

இதர வருவாய்

இதர வருவாய்

ஜூன் 30 வரையில் முடிந்த காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் இதர வருவாய் 787 கோடி ரூபாயாக இருந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

In dividend largesse, TCS to share ₹12,750 crore with shareholders

In what could be the highest-ever dividend payout by an Indian company, Tata Consultancy Services will shell out about ₹12,750 crore to its 600,000 shareholders.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X