சென்னை: இன்று தங்கம் கிராமிற்கு 2 ருபாய் அதிகரித்துள்ளது, மேலும் நேற்று மற்றும் இன்றைய தங்க வர்த்தகத்தில் பெரிய அளவில் மாற்றம் ஏதும் இல்லாத காரணத்தினால் நகை கடைகளில், தங்க நகைகளின் வியாபாரம் சிறப்பாக உள்ளது. இன்றைய வர்த்தகத்தில் 22 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 2 ரூபாய் அதிகரித்து 2670.00 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
கடந்த 14ஆம் தேதி 22 கேரட் ஒரு கிராம் தங்கம் 2,702 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், ஒரு வாரக் காலத்தில் இதன் விலை சுமார் 30 ரூபாய் குறைந்து இன்று 2,670 ரூபாய் விற்கப்படுகிறது. அதே போல் 1கிராம் 24 கேரட் தங்கத்தின் இன்று 2 ரூபாய் அதிகரித்து 2,864.00 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்
ஹைதராபாத்
ஹைதராபாதில் 10 கிராம் தங்கம் ரூ.26,760
பெங்களூரு
பெங்களூரில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.26,740
கொல்கத்தா
கொல்கத்தாவில் 10 கிராம் தங்கம் ரூ.26,720
டெல்லி
தலைநகரமான டெல்லியில் 10 கிராம் தங்கம் ரூ.26,660
சென்னை
நமது சென்னையில் 10 கிராம் தங்கம் ரூ.26,700
மும்பை
மும்பையில் 10 கிராம் தங்கம் ரூ.26,680
வெள்ளி
தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. 1 கிலோ வெள்ளியின் விலை 186 ரூபாய் அதிகரித்து 45,384 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த ஒரு வாரக் காலகட்டத்தில் வெள்ளியின் விலை 1 கிலோவிற்கு 530 ரூபாய் குறைந்துள்ளது.
டாலர் - ரூபாய்
இன்றைய வர்த்தக துவக்கம் முதலே அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.30 ரூபாயில் துவங்கி 60.22 ரூபாய் என்ற நிலையில் நாணய பரிமாற்றம் செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications