மும்பை: இந்தியாவில் பருவ மழை பொய்த்ததன் காரணமாக தக்காளி, வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு ஆகிய உணவுப்பொருட்களின் விலைகள் வழக்கத்தை விட மிக அதிகமாக உள்ள நிலையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி ரிசர்வ் வங்கி தன்னுடைய நிதிக் கொள்கையை அறிவிக்கவுள்ளது.
உணவு பற்றாக்குறை, நடப்பு கணக்கு பற்றாக்குறை, நாட்டின் வளர்ச்சி ஆகியவை நிலையாக இல்லாத நிலையில் ரிசர்வ் வங்கியின் இந்த நிதிக் கொள்கை மிகவும் முக்கியமானதாக உள்ளது. மேலும் ரிசர்வ் வங்கியின் வட்டி உயர்வு இந்திய நிதியமைப்பில் மிகப் பெரிய மாற்றத்தை உண்டாக்கும். வட்டி நிலவரத்தை குறித்து முக்கிய வங்கி அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள்.....
(Read: Syndicate Bank shares slump 7 per cent as Chairman arrested for taking bribe)
எஸ்.பி.ஐ
பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, ரிசர்வ் வங்கி தன் நிதிக் கொள்கை ஆய்வுக் கூட்டத்தில் வட்டி விகிதங்களில் மாற்றம் ஏதுமின்றி வைத்திருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். அவர் "தற்போதுள்ள நிலையில் (வட்டி விகிதம்) எந்த மாற்றமும் இருக்காது என நான் நினைக்கிறேன்" என அவர் கூறினார்.
பரேஷ் சுக்தாங்கர்
ஹெச்.டி.எப்.சி வங்கியின் இணை மேலாண்மை இயக்குனர் பரேஷ் சுக்தாங்கர் "கொள்கை வட்டி விகிதங்கள் நிலையாக இருக்கும் என்று எங்களுக்குத் தோன்றுகிறது" எனத் தெரிவித்தார்.
பொருளாதார முன்னேற்றம்
அவர் மேலும் கூறுகையில், நடப்பாண்டின் மொத்த நாட்டு உற்பத்தியில் நாங்கள் கொண்டுள்ள சில அனுமானங்கள், கொள்கை வட்டி விகித குறைப்பின் விளைவுகளை அடிப்படையாகக் கொண்டவை. நாம் எதிபார்க்கும் பொருளாதார முன்னேற்றம் கொள்கை முடிவுகளைப் பொறுத்து அமைவதுடன் அதே சமயம் குறைந்த வட்டியினை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிராது" என்றார்.
வட்டி வகிதம் சில புள்ளிகள் குறையும்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அளித்துள்ள தகவல்களின் அடிப்படையில் வட்டி விகிதம் இந்த கொள்கை ஆய்வில் மாற்றமின்றி இருக்கும் என்றும் வரும் காலங்களில் குறைய வாய்ப்புள்ளது என்றும் தெரிகிறது.
ரகுராம் ராஜன்
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற நிதிக்கொள்கை ஆய்வில், ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை சரி செய்ய முற்படவில்லை. இந்தியாவின் முக்கிய வங்கி அதிகாரிகள் சொல்வதை பார்க்கும் போது, இந்த முறையும் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனின் நிதிக் கொள்கை மறுஆய்வில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது என தெரிகிறது.
வட்டி வகிதம்
கடந்த நிதி கொள்கை மறுஆய்வில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 8 சதவீதமாகவும், பண இருப்பு விகிதம் 4 சதவிகிதம் என்ற அளவிலும் எந்த மாற்றமும் இன்றி தொடர்ந்தது.
எஸ்.எல்.ஆர் விகிதம்
சட்டப்படியான புழக்க விகிதங்கள் (SLR) அதாவது கடன் பத்திரங்களை வெளியிடுவோர் கட்டாயமாக ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டிய தொகையின் அளவானது ஜூன் 14 ஆம் தேதி முதல் அவர்களுடைய மொத்த தேவை மற்றும் கால பொறுப்புகளில் 0.5 சதவிகிதம் குறைக்கப்பட்டு 22.5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications