சென்னை: கடந்த ஒரு வார காலகட்டத்தில் தங்கத்தின் விலையில் பல சிறு ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும், பெரிய அளவிலான மாற்றங்கள் எது இல்லை. இதற்கு முக்கிய காரணம் தங்க இறக்குமதியில் இருக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் தான். இதுமட்டுமல்லாமல் உலக நாடுகளில் தங்கம் மீதான வர்த்தகம் குறைந்துள்ளதாலும், இதன் விலை நிலையாக உள்ளது.
மேலும் சுவிஸ் வங்கிகள் தனது வாடிக்கையாளர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி வாயிலாக பணத்தை பிரிமாற்றம் செய்து வருவதால் உலக நாடுகளில் இந்த இறக்குமதி கடுமையாக்கப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக கடந்த வாரத்தில் தங்கம் விலை 15 ரூபாய் மட்டுமே அதிகரித்துள்ளது. இன்று தங்கம் மீதான வர்த்தகத்தில் 22 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 1 ரூபாய் மட்டும் உயர்ந்து 2669.00 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
(Read: 5 reasons to be buying gold in India now)
தங்க விலை நிலவரம்
கடந்த ஜூலை 29ஆம் தேதி 22 கேரட் ஒரு கிராம் தங்கம் 2,654 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், ஒரு வாரக் காலத்தில் இதன் விலை சுமார் 15 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. அதே போல் 1கிராம் 24 கேரட் தங்கத்தின் இன்று 1 ரூபாய் அதிகரித்து 2861.00 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வெள்ளி
தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. ஒரு வார காலகட்டத்தில் 1 கிலோ வெள்ளியின் விலை 670 ரூபாய் அதிகரித்து இன்று 44,788 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
டாலர் - ரூபாய்
இன்றைய வர்த்தக துவக்கம் முதலே அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.90 ரூபாயில் துவங்கி 60.82 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்
ஹைதராபாத்
ஹைதராபாதில் 10 கிராம் தங்கம் ரூ.26,650
பெங்களூரு
பெங்களூரில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.26,630
கொல்கத்தா
கொல்கத்தாவில் 10 கிராம் தங்கம் ரூ.26,660
டெல்லி
தலைநகரமான டெல்லியில் 10 கிராம் தங்கம் ரூ.26,570
சென்னை
நமது சென்னையில் 10 கிராம் தங்கம் ரூ.26,690
மும்பை
மும்பையில் 10 கிராம் தங்கம் ரூ.26,590


Click it and Unblock the Notifications