துபாயில் புதிய கிளையை துவக்கிய ஹெச்.டி.எஃப்.சி வங்கி!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ஹெச்.டி.எஃப்.சி வங்கி தனது வங்கிக் கிளையை துபாயிலுள்ள சர்வதேச நிதி மையத்தில் துவங்கியதன் மூலம் அரபு நாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு சொத்து தொடர்பான நிர்வாகச் சேவைகளை வழங்குகிறது.

 

பஹ்ரைன் மற்றும் ஹாங்காங் நாடுகளுக்கு அடுத்தபடியாக வெளிநாடுகளில் திறக்கப்பட்டுள்ள மூன்றாவது வெளிநாட்டுக் கிளை இது என அவ்வங்கியின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. ஏற்கனவே துபாயிலும் அபு தாபியிலும் இரு பிரதிநிதி அலுவகங்களை இவ்வங்கி கொண்டுள்ளதோடு, அவை தொடர்ந்து இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Read: 7 reasons why the SBI Magnum Equity Fund is a great buying opportunity)

புதிய கிளை

புதிய கிளை

இந்த புதிய கிளை வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு நிதி, வணிகக் கடன், மற்றும் பிற கடன்கள் தொடர்பான அறிவுரைச் சேவைகளை வழங்கும்.

வங்கி சேவைகள்

வங்கி சேவைகள்

இந்த வங்கியின் பஹ்ரைன் மற்றும் ஹாங் காங் கிளைகள், சக்தி படைத்த நபர்களுக்கு நிறுவன மற்றும் வியாபாரக் கடன்கள் மற்றும் டெபாசிட்டுகள் போன்ற சேவைகளை வழங்குகின்றன.

வெளிநாட்டு வங்கி சேவை

வெளிநாட்டு வங்கி சேவை

"எங்கள் வெளிநாட்டு விரிவக்கப் பணிகளை வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவைகளைத் தருவதற்காக தொடர்ந்து செய்வோம்" என அவ்வங்கியின் முதலீடு, தனியார் வங்கிச் சேவைகள், மூன்றாம் நபர் சேவைகள், வெளிநாடுவாழ் இந்தியர் மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர் துறைகளை கவனிக்கும் தலைவர் அபே ஐமா தெரிவித்தார்.

வங்கி கிளைகள்
 

வங்கி கிளைகள்

கடந்த ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி, இந்த வங்கி 3,488 கிளைகளையும், 11426 ஏ.டி.எம் இயந்திரங்களையும் 2,231 நகரங்களில் கொண்டிருந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

HDFC Bank opens branch in Dubai

HDFC Bank Ltd has opened its branch in Dubai at the International Financial Centre, and will provide wealth management services to non-resident Indians based in the UAE.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X