ஏர்ஏசியாவின் அடுத்த அதிரடி சலுகை!! கலக்கத்தில் ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ...

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: இந்தியாவில் பல மலிவு விலை விமான நிறுவனங்கள் இருக்கும் தருவாயில் சில மாதங்களுக்கும் முன்பு இந்தியாவில் கால்தடம் பதித்த ஏர்ஏசியாவின் வாடிக்கையாளர் சேவை மற்றும் சலுகை திட்டங்களாலும் அதிகளவிலான வாடிக்கையாளர் எண்ணிக்கையை பெற்றுள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் வருகை இந்தியாவில் இருக்கும் பிற நிறுவனங்களுக்கு ஒரு கடுமையான போட்டியை உருவாக்கியுள்ளது.

இத்தருவாயில் ஏர்ஏசியா நிறுவனம் வாடிக்கையாளர் மனதை மேலும் கவரும் வகையில் விமான பயண டிக்கெட் விலையில் 20 சதவீத சலுகையை அறிவித்துள்ளது. இதனால் ஸ்பைஸ்ஜெட் மற்றும் இண்டிகோ நிறுவனங்களுக்கும் முகம் வேர்த்துள்ளது.

(READ: 6 reasons to buy Gold ETFs in place of physical gold)

6 நாள் சலுகை

6 நாள் சலுகை

இந்த சலுகை செவ்வாய் கிழமை துவங்கி 6 நாட்களுக்கு (ஆகஸ்ட் 17 வரை) ஏர்ஏசியா நிறுவனம் அளிக்கிறது. பெங்களுரில் இருந்து சென்னை, கொச்சி. மற்றும் கோவாவிற்கு செல்லும் பயணிகள் தங்களின் விமான கட்டணத்தில் 20 சதவீத சலுகை பெறலாம் என ஏர்ஏசியா நிறுவனம், செய்தி வெளியிட்டுள்ளது.

புதிய சேவை

புதிய சேவை

இந்நிறுவனம் தற்போது பெங்களுரை தலைமையிடமாக கொண்டு சென்னை, கொச்சி. மற்றும் கோவாவிற்கு விமான சேவை அளித்து வருகிறது. முன்பு இந்நிறுவனத்தின் தலைமையகம் சென்னையில் இருந்தது குறிப்பிடதக்கது. மேலும் ஏர்ஏசியா நிறுவனம் புதியதாக பெங்களுரில் இருந்து ஜெய்பூர் மற்றும் சண்டிகர் நகரங்களுக்கு சேவையை துவங்க திட்டமிட்டுள்ளது.

டிசம்பர் 14

டிசம்பர் 14

இந்த 20 சதவீத சலுகையில், ஆகஸ்ட் 17ஆம் தேதி வரையில் உங்கள் பயணத்திற்கான டிக்கெட்டை பதிவு செய்யலாம். மேலும் உங்கள் பயணத்தை டிசம்பர் 14ஆம் தேதி வரையில் அமைத்துக் கொள்ளவும் முடியும்.

அரம்பமே அலப்பறை

அரம்பமே அலப்பறை

இந்த மலேசிய விமான நிறுவனம், இந்தியாவில் வரும்போதே 35 சதவீத குறைவான விலையில் விமான போக்குவரத்து சேவையை அளிப்போம் என உறுதி அளித்துதான் களத்திலே குதித்தது. மேலும் "இந்த அதிரடி சலுகைகள் அனைத்து வாடிக்கையாளர் எங்களின் சிறப்பான சேவையை அனுபவிக்கவும், எங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கையை உயர்த்தவும் திட்டமிட்டடே இத்தகைய சேவையை அளித்து வருகிறோம்" என இந்நிறுவனத்தின் சீஇஓ மித்தூன் சந்தில்யா தெரிவித்தார்.

ஜெய்பூர் மற்றும் சண்டிகர்

ஜெய்பூர் மற்றும் சண்டிகர்

இந்நிறுவனத்தின் ஜெய்பூர் மற்றும் சண்டிகர் நகரத்திற்கான விமான சேவை வருகிற செபடம்பர் 5 முதல் அக்டோபர் 25ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என ஏர்ஏசியா தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

AirAsia India lowers fares, offers 20% discount

AirAsia India, the latest entrant in domestic air space, has lowered its fares by 20 per cent for a limited period on all its flights. 
Story first published: Wednesday, August 13, 2014, 16:22 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X