சென்னை: இம்மாதம் 15ஆம் தேதி முதல் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. அதிலும் இன்றைய வர்த்தகத்தில் தங்கத்தின் விலை கிராமிற்கு 10 ரூபாய் என்ற அளவில் குறைந்துள்ளது குறிப்பிடதக்கது.
உலக நாடுகள் தங்களது தங்க இருப்பை குறைக்க முடிவு செய்ததன் காரணமாக தங்கத்தின் மீதான மொத்த வர்த்தகம் குறைந்து அதன் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இதன் காரணமாக உலக சந்தையிலும் தங்கத்தின் விலை சரிந்துள்ளது. ஆசிய பசிபிக் சந்தையின் தங்க விலையை நிர்ணயம் செய்யும் சிங்கப்பூர் சந்தையில் தங்கம் மீதான வர்த்தகத்தில் 1 சதவீதம் சரிந்துள்ளது.
தங்கம்
கடந்த 13ஆம் தேதி 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.2,712 ஆக இருந்து. ஆனால் இன்று 1 கிராம் தங்கம் ரூ.2,666 என்ற விலையில் விற்கப்படுகிறது.
வெள்ளி
தங்கத்தை போல அல்லாமல் வெள்ளியின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. 1 கிலோ வெள்ளியின் விலை 508 ரூபாய் குறைந்து 42,434 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
டாலர் - ரூபாய்
இன்றைய வர்த்தக துவக்கம் முதலே அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.70 ரூபாய் என்ற நிலையில் நாணய பரிமாற்றம் செய்யப்படுகிறது.
இனி 10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரத்தை இந்தியாவின முக்கிய நகரவாரியாக பார்க்கலாம்.
ஹைதராபாத்
ஹைதராபாதில் 10 கிராம் தங்கம் ரூ.26,650
பெங்களூரு
பெங்களூரில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.26,630
கொல்கத்தா
கொல்கத்தாவில் 10 கிராம் தங்கம் ரூ. 26,680
டெல்லி
தலைநகரமான டெல்லியில் 10 கிராம் தங்கம் ரூ.26,530
சென்னை
நமது சென்னையில் 10 கிராம் தங்கம் ரூ.26,660
மும்பை
மும்பையில் 10 கிராம் தங்கம் ரூ.26,550


Click it and Unblock the Notifications