தொடரும் சாதனை.. புதிய உச்சத்தை தொட்டது நிஃப்டி!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்திய பங்கு சந்தை இந்த வாரம் முழுக்க புதிய உச்சத்தை தொட்டு வந்த நிலையில், அமெரிக்காவிற்கு அதிகப்படியாக மென்பொருள் எற்றுமதி செய்ததால் உலகளவில் இத்துறையில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இதனால் நேற்று பங்கு சந்தையில் ஐடி நிறுவன பங்குள் அனைத்து சிறப்பான வர்த்தகத்தை சந்தித்தது.

 

இதன் எதிரொலியாக நிஃப்டியில் அதிரடியாக சுமார் 7,929.05 புள்ளிகள் வரை எட்டி வரலாற்று சாதனையை படைத்தது. இந்த வாரத்தில் மட்டும் சுமார் நான்கு முறை நிஃப்டி புதிய உச்சத்தை எட்டியது குறிப்பிடதக்கது.

மும்பை பங்கு சந்தை

மும்பை பங்கு சந்தை

நேற்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தை 0.23% அல்லது 59.44 புள்ளிகள் உயர்ந்து 26, 419.55 புள்ளிகள் என்ற அளவில் முடிவடைந்தது. அதேபோல் நிஃப்டி 0.28% அல்லது 22.10 புள்ளிகள் உயர்ந்து 7,913.20 புள்ளிகள் என்ற அளவில் முடிவடைந்தது.

அன்னிய முதலீட்டு நிறுவனங்கள்

அன்னிய முதலீட்டு நிறுவனங்கள்

நேற்றைய வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் சுமார் 413 கோடி ரூபாய் பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் இவ்வாரத்தில் புதன் கிழமை செபி வெளியிட்ட அறிக்கையில் கடன் சந்தையில் அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் சுமார் 16,072 கோடி ரூபாய் அளவு முதலீடு செய்துள்ளதாக குறிப்பிட்டு இருந்தது.

ரூபாய் மதிப்பு
 

ரூபாய் மதிப்பு

அதேபோல் ரூபாய் மதிப்பு கடந்த 3 வார உச்சத்தை பெற்றுள்ளது. ஜூலை 31ஆம் தேதி டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு 60.3750 ரூபாய் என்ற அளவில் இருந்தது. ஆனால் இன்று வர்த்தக முடிவில் 60.55 ரூபாய் என்ற நிலையில் உயர்ந்துள்ளது குறிப்பிடதக்கது.

உலக சந்தைகள்

உலக சந்தைகள்

ஜாப்பான், சீனா, பிரட்டன், ஜெர்மனி மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளிந் பங்கு சந்தைகள் அனைத்தும் இன்று குறிப்பிடதக்க வளர்ச்சியை சந்தித்துள்ளது குறிப்பிடதக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nifty touches record high; software stocks gain

Markets ended higher on Friday led by IT exporters after upbeat US economic data indicated signs of an uptick in the world's largest economy. Further, the benchmark Nifty, ended above 7,900 for the first time after hitting a fresh record high of 7,929.05 for the fourth time this week.
Story first published: Saturday, August 23, 2014, 12:09 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X