டெல்லி: ஃபோர்ப்ஸ் இதழ் ஆசியாவின் அருமையான 50 பொது வர்த்தக நிறுவனங்கள் என்ற தலைப்பில் ஒவ்வொரு வருடமும் ஆய்வு செய்து வருகிறது. 2014ஆம் வருடத்தின் ஆய்வு முடிவில் இந்தியாவின் 12 நிறுவனங்கள் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
எப்போது இந்தியாவில் இருந்து 5 முதல் 8 நிறுவனங்கள் தான் இப்பட்டியலில் இடம் பெறும் ஆனால் இவ்வருடம் 12 நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது. வழக்கம்போல இந்த வருடமும் இப்பட்டியலில் சீனா முன்னிலை வகிக்கிறது.
சீன நிறுவனங்களின் நிலை
கடந்த இரண்டாண்டுகளுக்கும் முன் இப்பட்டியலில் சீன நிறுவனங்கள் 23 என்ற எண்ணிக்கையிலிருந்து கடந்த ஆண்டு இருபதாகக் குறைந்த அது இந்த வருடம் பதினாறாகக் குறைந்துள்ளது என ஆசியாவிற்கான ஃபோர்ப்ஸ் இதழின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டென்சென்ட் - டிசிஎஸ்
சீனாவின் தொழில்நுட்ப நிறுவனங்கள் மிகுந்த வலிமையானதாக தென்பட்டதோடு, டென்சென்ட் நிறுவனம் 155.6 பில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மதிப்புடன் இந்தியாவின் டாட்டா கன்சல்டன்சி நிறுவனத்தைப் போல ஏறக்குறைய இரண்டுமடங்கு பெரியதாக உள்ளது.
லெனோவொ அதிகப்படியான வருவாய்
லெனோவொ வருடாந்திர வருவாய் அடிப்படையில் 38.7 பில்லியன் டாலருடன் மிகப்பெரும் நிறுவனமாக டாட்டாவை சற்றே முந்தியது. இந்தியா ஃபோர்ப்ஸ் ஆசியா பட்டியலில் 12 நிறுவனங்களுடன் கடந்த ஆண்டைப்போலவே சீனாவிடம் பின்தங்கியுள்ளது
ஹெச்டிஎஃப்சி வங்கி
இந்தியாவின் இரண்டாவது பெரிய தனியார் துறை வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கி, இந்தப் பட்டியலில் எட்டு வருடங்களாக இடம்பெற்று வருகிறது. 2005 ஆம் ஆண்டு முதல் ஃபோர்ப்ஸ் இதழ் தயாரித்த பட்டியல்களில் அதிக முறை இடம்பிடித்த நிறுவனம் என்ற பெயரை இந்த வங்கி பெற்றுள்ளது.
இந்திய நிறுவனங்கள்
பிற குறிப்பிடத்தக்க இந்திய நிறுவனங்களில், ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் ஐந்தாவது முறையாக இடம்பெற்றதுடன், சன் ஃபார்மா தொடர்ந்து மூன்றாவது முறையாக இடம்பெற்றுள்ளது. மஹிந்த்ரா அண்ட் மஹிந்த்ரா கடந்த இரண்டாண்டுகள் பட்டியலில் இடம் பெறாமல் தற்பொழுது இடம் பெற்றுள்ளது.
3 பில்லியன் டாலர்
இந்த 50 அருமையான ஆசிய நிறுவனங்கள், குறைந்தபட்சம் மூன்று பில்லியன் அமெரிக்க டாலர் அல்லது அதற்கு மேல் வருடாந்திர வர்த்தகம் அல்லது சந்தை முதல் கொண்ட 1,300 பொது நிறுவனங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை என ஃபோர்ப்ஸ் தெரிவித்தது.


Click it and Unblock the Notifications