மும்பை: செப்டம்பர் மாத துவக்க வர்த்கத்தில் நிஃப்டி 8,000 புள்ளிகளை எட்டி வரலாற்று சாதனையை படைத்தது, அதேபோல் சென்செக்ஸ் இன்று 27,000 புள்ளிகள் என்ற இமாலய உயரத்த எட்டி புதிய சாதனையை படைத்துள்ளது. சென்செக்ஸ் இன்று மட்டும் சுமார் 210 புள்ளிகள் வரை உயர்ந்தது குறிப்பிடதக்கது.
இன்றைய வர்த்தகத்தில் மருந்து தயாரிப்புத் துறை மற்றும் ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்கள் அதிகப்படியான லாபத்தை பெற்றுள்ளது. மேலும் சென்செக்ஸ் இதற்கு முன் 26,000 புள்ளிகள் என்ற உயரிய இலக்கை எட்டி வெறும் 36 வர்த்தக நாட்களில் 27,000 புள்ளிகளை எட்டியது வியப்புக்குரியது.
பங்கு சந்தை
மும்பை பங்கு சந்தை இன்று அதிகப்படியாக 210.62 புள்ளிகள் உயர்ந்தி 27,078.17 புள்ளிகளை தொட்டுள்ளது. அதேபோல் நிஃப்டி 72.40 புள்ளிகள் உயர்ந்து 8,100 புள்ளிகள் வரை உயர்ந்தது குறிப்பிடதக்கது.
மருந்து தயாரிப்பு நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் சிப்லா நிறுவனம் அஸ்துமா நோய்க்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட இன்ஹேலர் ஜெர்மனி மற்றும் சுவீடன் நாடுகளில் அறிமுகப்படுத்தியதன் காரணமாக இந்நிறுவன பங்குகள் சுமார் 6.7 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அதேபோல் சன்பார்மா நிறுவனம், டாக்டர் ரெட்டி ஆகிய நிறுவனம் சந்தையில் உச்சத்தை பெற்று இருந்தது.
பார்தி ஏர்டெல்
சிப்லா நிறுவனத்தை தொடர்ந்து பார்தி ஏர்டெல் நிறுவனம் ஒய்யூ மொபைல் நிறுவனத்தை கைபற்றியதன் காரணமாக இந்நிறுவனத்தின் பங்குகள் சுமார் 4.48 சதவீதம் உயர்ந்தது.
சென்செக்ஸ்
நடப்பு நிதியாண்டு துவக்கம் முதல் சென்செக்ஸ் 27.43% உயர்ந்துள்ளது, இத்தகைய உயர்வில் பெரும் பங்கு வகிப்பது, அன்னிய முதலீட்டாளர்கள் 12.91 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்திய நிறுவன பங்குகளில் முதலீடு செய்துள்ளது தான்.
நடப்பு கணக்கு பற்றாக்குறை
மேலும் நாட்டின் சிறப்பான வர்த்தகம் மற்றும் அதிகப்பியான மென்பொருள் ஏற்றுமதியின் காரணமாக நடப்பு கணக்கு பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.7 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த வருடம் ஜூன் மாதத்தில் 4.8 சதவீதமாக இருந்தது குறிப்பிடதக்கது.
ஐரோப்பிய சென்ட்ரல் வங்கி
யூரோ நாணயத்தை வலுப்படுத்துவதற்காக ஐரோப்பிய சென்ட்ரல் வங்கி இம்மாத 4ஆம் தேதி ஒரு முக்கிய கூட்டத்தை கூட்ட உள்ளது. இதன் மூலம் ஐரோப்பிய சந்தைகளில் சிறு அளவிலான முன்னேற்றத்தா பார்க்க முடியும். இதன் தாக்கம் இந்திய சந்தைகளிலும் கண்டிப்பாக இருக்கும் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக சந்தைகள்
இந்தியாவின் வலமான பங்கு சந்தை வளர்ச்சியில் உலக சந்தைகள் சரிவை தழுவியுள்ளது, குறிப்பாக சீன சந்தை அதிகளவில் சரிந்துள்ளது. மேலும் அமெரிக்க சந்தைகள் உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications