சென்னை: புதன்கிழமை வர்த்தகத்தில் தங்கம் சவரனுக்கு 208 ரூபாய் குறைந்துள்ளது, இதனால் இந்திய நகை கடைகளில் மக்கள் கூட்டம் கூட துவங்கியுள்ளது, மேலும் தங்க காசுகள் மற்றும் தங்க கட்டிகளின் விற்பனை சிறப்பாக உள்ளது என நகை கடைஉரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 24 கேரட் 1கிராம் தங்கத்தின் விலை 27 ரூபாய் குறைந்துள்ளது. இன்று இதன் விலை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை பங்கு சந்தை மற்றும் நிஃப்டி சந்தை புதிய உயரங்களை எட்டியதை தொடர்ந்து, இந்திய சந்தையில் அதிகப்படியான அன்னிய முதலீடு குவியும் வண்ணம் உள்ளது. இதனால் தங்க மீதான வர்த்தகம் குறைந்து வருகிறது, மேலும் உலக நாடுகளும் தங்களது தங்க இருப்பை குறைத்து வருவதால் தற்போது தங்கம் பொழிவிழந்து உள்ளது.
மேலும் நடப்பு கணக்கு பற்றாக்குறை 1.7 சதவீதமாக குறைந்ததை தொடர்ந்து தங்க இறக்குமதியில் சில தளர்வுகளை எதிர்பார்கலாம் என தெரிகிறது. இறக்குமதியில் தளர்வுகள் கிடைத்தால் தங்க விலை மேலும் குறையும் என தங்க வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் கணிப்புகள் உடைந்தது. இன்று காலை வர்த்தகத்தில் 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை 40 ரூபாய் அதிகரித்துள்ளது.
கடந்த ஒரு மாதமாக தங்கத்தின் விலையில் பல ஏற்ற இறக்கங்கள் சந்தித்ததுள்ளது, இதில் பெருவாரியாக சரிவு மட்டுமே. இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.2,643 ஆக இருந்தது, இன்று இதன் விலை ரூ.2,596 வரை குறைந்ததுள்ளது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 554 ரூபாய் குறைந்து 41,722 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு மாத காலமாக 60.20 முதல் 60.50 ரூபாய் வரையில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இன்று இதன் மதிப்பு 60.46 ரூபாய் என்ற நிலையில் நாணய பரிமாற்றம் செய்யப்படுகிறது. இனி 10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரத்தை இந்தியாவின் முக்கிய நகர வாரியாக பார்க்கலாம். ஹைதராபாதில் 10 கிராம் தங்கம் ரூ.26,080 பெங்களூரில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.26,020 கொல்கத்தாவில் 10 கிராம் தங்கம் ரூ.26,040 தலைநகரமான டெல்லியில் 10 கிராம் தங்கம் ரூ.25,880 நமது சென்னையில் 10 கிராம் தங்கம் ரூ.25,960 மும்பையில் 10 கிராம் தங்கம் ரூ.25,920
தங்கம்
வெள்ளி
டாலர் - ரூபாய்
ஹைதராபாத்
பெங்களூரு
கொல்கத்தா
டெல்லி
சென்னை
மும்பை


Click it and Unblock the Notifications