தங்க இறக்குமதி வரியில் தளர்வு இல்லை!! நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

டெல்லி: தற்போதிருக்கும் இந்திய பொருளாதார நிலைமையில் தங்க இறக்குமதி வரியில் எந்த விதமான தளர்வுகளும் எதிர்பார்க்க முடியாது என வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

கடந்த வருடம் நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைப்பதற்காக மத்திய அரசு சமார் 10 சதவீதம் இறக்குமதி வரியை அதிகரித்தது. இதனால் இந்தியாவில் தங்கம் இறக்குமதி மள மளவென குறைந்தது. வரி உயர்வால் நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைந்தாலும், நாட்டில் தங்க கடத்தல் அதிகரித்துள்ளது.

அப்படியா?? சொல்லவே இல்ல..

அப்படியா?? சொல்லவே இல்ல..

தங்க கடத்தல் குறித்த கேள்விக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன்,"வரி உயர்விற்கும் நாட்டில் தங்க கடத்தல் உயர்விற்கும் எந்த ஒரு சம்மந்தம் இல்லை. தங்க கடத்தலுக்கு இது மட்டும் காரணமாக அமையாது. வரி உயர்வால் நாட்டின் பொருளாதார நிலை சீரடைத்துள்ளது. மேலும் அடுத்த சில மாதங்களுக்கு தங்க இறக்குமதி வரியில் எந்த வித தளர்வும் எதிர் பார்க்க முடியாது." என்று கூறினார்.

இறக்குமதி குறைவு..

இறக்குமதி குறைவு..

வரி உயர்வால் நாட்டில் தங்க இறக்குமதி 2013-14ஆம் நிதியாண்டில் சுமார் 638 டன் வரை குறைந்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டு 845 டன்னாக உள்ளது குறிப்பிடதக்கது. மேலும் நடப்பு கணக்கு பற்றாக்குறைய குறைப்பதற்காக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தங்க வாங்குவதையும், இறக்குமதியையும் ஆதரிக்க வேண்டாம் என கூறியது முக்கியமான ஒன்று.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

இறக்குமதி வரி உயர்வு மட்டும் அல்லாமல், இறக்குமதி செய்யப்படும் தங்கத்தில் குறிப்பிடதக்க அளவுக்கு ஏற்றுமதி செய்யவேண்டும் என ரிசர்வ் வங்கி இறக்குமதியாளர்களை நிர்பந்தம் செய்தது. தங்க கடத்தலும் இதுவும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

கடத்தல்

கடத்தல்

இந்தியாவில் தங்க கடத்தல் காலம் காலமாக நடந்தேரி வருகிறது. கடந்த 3 நிதியாண்டுகளில் கடந்த வருடம் மட்டும் சுமார் 2,441 வழக்குகள் பதிவாகியுள்ளது, 2012-13ஆம் ஆண்டுகளில் 869 வழக்குகள், 2011-12ஆம் ஆம் ஆண்டுகளில் 500 வழக்குகள் பதிவாகி இருப்பது குறிப்படதக்கது. (தெரிந்தது இவ்வளோ... தெரியாம எவ்வளவு இருக்குமோ...)

அதிகப்படியான தங்க இறக்குமதி

அதிகப்படியான தங்க இறக்குமதி

2012-13ஆம் நிதியாண்டுகளில் இந்தியாவில் அதிகபடியான தங்க இறக்குமதி இருந்தது, இதனால் நடப்பு கணக்கு பற்றாக்குறை 4.7 சதவீதமாக இருந்தது குறிப்பிடதக்கது. ஆனால் இறக்குமதி வரிகளை உயர்த்திய பிறகு 1.7 சதவீதமாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+