டெல்லி: இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் வங்கிச் சேவை கிடைக்க வேண்டும் நோக்கத்தில் துவங்கப்பட்ட பிரதான்மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தின் படி இதுவரை சுமார் 3.02 கோடி மக்களுக்கும் வாங்கி கணக்கு துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 1496.51 கோடி டெபாசிட் தொகை மத்திய அரசிற்கு கிடைத்துள்ளது.
ஆகஸ்ட் 15ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இத்திட்டத்தை அறிவித்தார். அதன்படி மிக விரைவாக இத்திட்டம் ஆகஸ்ட் 28ஆம் அன்று துவங்கப்பட்டது.
முதல் நாள்
இத்திட்ட துவங்க நாளிலேயே ஒரு கோடி வங்கி கணக்கு திறக்கப்பட வேண்டும் என இலக்கை நிர்ணயம் செய்து இந்தியாவில் இருக்கும் அத்தனை பொதுத்துறை வங்கிகளும் கடுமையாக உழைத்து இலக்கை எட்டியது.
வங்கி கணக்கு திறக்க என்ன வேண்டும்..
இத்திட்டத்தில் வங்கி கணக்கு துவங்க ஆதார் அட்டை அல்லது ஏதேனும் ஒரு ஆவணங்களை கொண்டு வங்கி கணக்கு தொடங்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், கடந்த 8ம் தேதி வரை நாடு முழுவதும் 3.02 கோடி பேர் புதிதாக வங்கி கணக்கு தொடங்கியுள்ளனர்.
டெபாசிட் தொகை
இத்திட்டத்தின் கீழ் 3.02 கோடி வங்கி கணக்கு திறந்ததன் மூலம் சுமார் ரூ.1,496.51 கோடி அளவிற்கு டெபாசிட் தொகையை வங்கிகள் வசூலித்துள்ளது குறிப்பிடதக்கது. மேலும் இந்திய தபால் துறையை முழுமையான வங்கியாக மாற்ற மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
விளம்பரம்
மேலும் பிரதமரின் இத்திட்டம் இந்தியா முழுவதும் பிரபலப்படுத்த விளம்பரப் படுத்துவதற்காக மட்டும் சுமார் 100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்படதக்கது.


Click it and Unblock the Notifications