டெல்லி: இந்தியாவில் ஏற்றுமதி விகிதம் சுமார் ஐந்து மாத சரிவை தழுவியது. 2014ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் ஏற்றுமதி விகிதம் 2.35 சதவீதத்தை எட்டியது. இம்மாத்தில் நடைபெற்ற வர்த்தகத்தின் மதிப்பு 26.95 பில்லியன் டாலராகும். இதனால் மொத்த வர்த்தகத்தில் 10.83 பில்லியன் டாலர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இக்காலகட்டத்தில் தங்க இறக்குமதி கடுமையாக உயர்ந்துள்ளது.
ஐரோப்பிய சந்தைகள்
இந்தியாவில் ஏற்றுமதி குறைந்ததிற்கு முக்கிய காரணம் ஐரோப்பிய சந்தைகளின் நிலையற்ற தன்மை தான் என ஏற்றுமதி கழகம் தெரிவித்துள்ளது. மேலும் ஐரோப்பிய நாடுகளின் புதிய ஏற்றுமதி கொள்கை நாட்டின் ஏற்றிமதியை அதிகரிக்கும் என எதிர்பாக்கிறோம் என எஃப்.ஐ.ஈ.ஓ தலைவர் ரபீக் அகமத் தெரிவித்தார்.
வர்த்தக பற்றாக்குறை
ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி நான்கு மாத சரிவை சந்தித்தது. கடந்த ஏப்ரல் மாத ஏற்றுமதியை ஒப்பிடும் போது ஆகஸ்ட் மாத ஏற்றுமதி பற்றாக்குறை சுமார் 10 பில்லியன் டாலராக இருக்கிறது.
தங்க இறக்குமதி கட்டுப்பாடு
முன்னாள் மற்றும் இன்னாள் மத்திய அரசுகள் விதித்த தங்க கட்டுப்பாடுகளால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஆபரணகளின் அளவு சுமார் 10.31 சதவீதம் சரிந்துள்ளது.
எண்ணெய் இறக்குமதி
இக்காலகட்டத்தில் இந்தியாவில் எண்ணெய் இறக்குமதி 14.97 சசதவீதம் குறைந்துள்ளது. இதேவேளையில் எண்ணெய் அல்லாத பொருட்களின் இறக்குமதி சுமார் 13.82 சதவீதம் உயர்ந்துள்ளது.
இறக்குமதி சரிவு
மேலும் ஆகஸ்ட் மாதத்தில் தேயிலை, காபி, அரிசி, புகையிலை, மசாலா பொருட்கள், எண்ணெய் பொருட்கள், இரும்பு தாது மற்றும் பெட்ரோலிய பொருட்களின் ஏற்றுமதியும் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications