பெங்களுரூ: ஒரு நிறுவனம் முதலீடுகளில் சிறந்து விளங்குகிறது என்றால், அது முதலீட்டு பத்திரங்களை வெளியிடுவது மட்டுமல்ல, அந்த முதலீட்டை சந்தையில் முதலீடு செய்து அதிகப்படியான லாபத்தை பெறுவதே ஒரு சிறந்த முதலீட்டு நிறுவனத்திற்கான அடையாளம்.
இது போன்ற நிறுவனங்கள் தங்கள் முதலீட்டளர்களிடம் இருந்து முதலீட்டை பெற்று அவற்றின் மூலம் பெறப்படும் இலாபம் அல்லது நட்டத்தை அவர்கள் செய்துள்ள முதலீட்டின் அடிப்படையில் பகிர்ந்தளிக்கும்.
மும்பை பங்குச்சந்தையின் விவரங்கள் படி, முதலீடு செய்வதில் முன்னிலையில் உள்ள நிறுவனங்களைப் பற்றி இங்கு அலசுவோம். பொதுவாக இந்திய சந்தையில் அதிகளவு முதலீடு செய்வது வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் தான். அந்த வகையில் இப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருப்பது எஸ்.பி.ஐ வங்கி தான்.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ)
எஸ்.பி.ஐ வங்கி வருவாய், சொத்து மதிப்பு மற்றும் சந்தை முதலீடுகள் அடிப்படையில் இந்தியாவிலேயே ஒரு மிகப்பெரிய நிதிச் சேவைகளை அளிக்கும் அரசுடமை வங்கியாக உள்ளது.
சுமார் 185,456.22 கோடி ரூபாய் மதிப்புடைய முதலீடுகள் மற்றும் சந்தை முதலீட்டை கொண்டு இப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையிடம் உள்ள இந்த வங்கியின் நிதிநிலை அறிக்கையின்படி, இந்நிறுவனம் சுமார் 398,308.19 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இது மொத்த சொத்து மதிப்பில் 24.11 சதவிகிதமாகும். இதன் தற்போதைய பங்கு மதிப்பு 2,629.80 ரூபாய்களாக உள்ளது.
ஐசிஐசிஐ வங்கி
ஐசிஐசிஐ வங்கி மும்பையைத் தலைமயிடமாகக் கொண்டு இயங்கும் பல்முனை நிதிச்சேவை இந்திய நிறுவனமாகும்.
சுமார் 178,756 கோடி ரூபாய் சந்தை முதலீடும், 177,021.82 கோடி ரூபாய் முதலீடுகளை கொண்டு இவ்வங்கி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. மும்பை பங்குச்சந்தையின் விவரங்கள் அடிப்படையில், மொத்த சொத்துக்கள் மதிப்பு 33.58 சதவிகிதமாக உள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி
இந்த வங்கி இந்தியாவிலேயே சொத்துக்கள் அடிப்படையில் மிகப்பெரிய வங்கியாகும். நாடு முழுவதும் சுமார் 764 நகரங்களில் 5,000 கிளைகளுடன் நாட்டிலேயே இரண்டாவது பெரிய வணிக வங்கியாகத் திகழ்கிறது. பாங்க ஆஃப் பரோடாவை முந்தியுள்ள இது, உலக வங்கிகள் அமைப்பான பாங்கர்ஸ் அல்மனாக்-இன் பட்டியலில் 248 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை விவரங்கள் படி, சந்தை முதலீடாக 34,016.47 கோடி ரூபாயைக் கொண்டுள்ளது. இதன் முதலீடுகள் 140,365.76 கோடியாகவும் மொத்த சொத்துக்கள் மதிப்பு 26.66 சதவிகிதமாகவும் உள்ளது.
ஹெச்டிஎஃப்சி வங்கி
ஹவுசிங் டெவெலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்போரேஷன் அல்லது ஹெச்.டி.எஃப்.சி வங்கி, சொத்துகள் மற்றும் சந்தை முதலீட்டு அடிப்படையில் இந்தியாவிலேயே மிகப்பெரிய வங்கிகளுள் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த வங்கி தான் முதன் முதலில் ரிசர்வ் வங்கியிடம் தனியார் வங்கிக்கான அனுமதி பெற்றது.
இதன் சந்தை முதல் 206,264 கோடி ரூபாயாகவும், சொத்துக்கள் மதிப்பு 28.45 சதவிகிதமாகவும் உள்ளது.
பாங்க் ஆஃப் பரோடா
பாங்க் ஆஃப் பரோடா அரசுடமை வங்கிகளிலேயே அதிக இலாபத்துடன் இயங்கும் வங்கியாகவும், வர்த்தக எண்ணிக்கையில் நாட்டில் இரண்டாவது பெரிய வங்கியாகவும் திகழ்கிறது. இந்த வங்கியின் தற்போதைய சந்தை முதல் 37,809.31 கோடி ரூபாயாகும்.
பாங்க் ஆஃப் இந்தியா
பாங்க் ஆஃப் இந்தியா டிசம்பர் 31,2013 ஆம் தேதி நிலவரப்படி, 54 வெளிநாட்டுக் கிளைகள் உட்பட 4,545 கிளைகளுடன் மஹாராஷ்டிராவில் தலைமையிடத்தைக் கொண்டு செயல்படும் அரசுடமை வங்கியாகும்
மும்பை பங்குச்சந்தையின் அண்மை விவரங்கள்படி, இந்த வங்கி சந்தை முதலாக 18,544.12 கோடியும், முதலீடுகளாக 114,152.44 கோடியும் சொத்துமதிப்பு 21.37 சதவிகிதமும் கொண்டுள்ளது.
ஆக்ஸிஸ் பாங்க்
ஆக்ஸிஸ் பாங்க் புதிய வங்கிகளில் முதன்மையானது. 1994-இல் அரசு தனியார் வங்கிகளைத் துவக்க அனுமத்தித்தபோது துவங்கப்பட்டது. இது 97,876.75 கோடி மதிப்புள்ள சந்தை முதலையும், 113,548 கோடி முதலீடுகளையும், 31.50 சதவிகித சொத்துக்களையும் கொண்டு இயங்குகிறது.
More From GoodReturns

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications