கலிபோர்னியா: ஆப்பிள் நிறுவனத்தின் சீஇஓ-வான டிம் குக் தனது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஒரு கடித்தை எழுதினார், அதில் எங்களது இணையதள சேவைகள் அனைத்தும் கூகிள் நிறுவனத்திற்கு முற்றிலும் மாறுபட்டது. நாங்கள் நாணயமானவர்கள்!! என்று எழுதி இருந்தார்.
சந்தையில் பல நிறுவனங்கள் உங்களுக்கு இலவச இண்டர்நெட் சேவைகளை அளித்து வருகிறது. ஆனால் இத்தகைய தளத்தில் நீங்கள் உங்களுக்கு தெரியமலே விற்கப்படுகறீர்கள்.
தகவல் திருட்டு
சில வருடங்கள் முன் இண்டர்நெட் இலவசம் என்றானது, அன்று முதல் நீங்கள் வாடிக்கையாளர் இல்லை, விற்பனை பொருளாக உள்ளீர்கள். ஆனால் ஆப்பிள் நிறுவனம் வாடிக்கையாளர் சேவையில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது.
கூகிள் நிறுவனம்
உலகின் முன்னணி இணையதள நிறுவனமான கூகிள் வாடிக்கையாளர் பயன்பாடு மற்றும் தகவல்களை கண்டறிந்து அதற்கு தகுந்தார் போல் இந்நிறுவனம் விளம்பரங்களை வெளியிடுகிறது. இதன் மூலம் கூகிள் நிறுவனம் மிகப்பெரிய தகவல் திருட்டில் ஈடுப்பட்டு பணத்தை சம்பாதித்து வருகிறது.
பேஸ்புக்
கூகிள் நிறுவனத்தை போல் மற்றொரு சமுகவலைதள நிறுவனமான பேஸ்புக் வாடிக்கையாளர் பதிவிடும் அத்தனை தகவல்களையும் நிறுவனங்களுக்கு வழங்குகிறது. இதன் மூலம் இந்நிறுவனம் பல முறைக்கேடான வேலைகள் செய்து வருகிறதாகவும் டிம் குக் தெரிவித்தார்.
டிம் குக்
இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் வாடிக்கையாளர் குறித்து எந்தவிதமான தகவலையும் செக் செய்வதில்லை, அதைபோல் ஐகிளவுட் இல் சேமிக்கப்படும் தகவல்களையும் சரிபார்ப்பதில்லை. மேலும் வாடிக்கையாளருக்கு வரும் இமெயில், குறுந்தகவல்களை கூட பார்ப்பதில்லை என்று தெரிவித்துள்ளது. இந்த அத்தனை வேலையையும் கூகிள் மற்றும் பேஸ்புக் செய்கிறது.
வாடிக்கையாளர் பாதுகாப்பு
ஆப்பிள் நிறுவனம் துவக்கும் முதலே வாடிக்கையாளருக்கு சிறந்த மற்றும் மேம்படுத்தபட்ட சேவைகளை மட்டுமே அளித்து அதற்கான கட்டணத்தை வசூல் செய்து வருகிறோம் என்று டிம் குக் தெரிவித்தார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications