மும்பை: உலக நாடுகள் தங்கத்தின் இருப்பை குறைப்பது போலவே வெள்ளியின் இருப்பையும் குறைத்து வருகிறது. இதனால் இன்று வெள்ளியின் விலை 6 மாதம் , 1 வருடம் இல்லை 4 வருட விலை சரிவை சந்தித்துள்ளது. அதனால் சில்லறை வியாபாரிகள் வெள்ளியை அதிகளவில் வாங்க துவங்கியுள்ளனர். வெள்ளி மற்றும் தங்கத்தின் விலை அடுத்த சில வாரங்களில் அதிகளவில் குறையும் என்பதால் மொத்த விற்பனை வியாபாரிகள் தங்களின் முதலீட்டை குறைந்துள்ளனர்.
உலக சந்தையில் வெள்ளியின் விலை குறைந்ததை போல ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,200 டாலராக குறைந்துள்ளது. இதனால் சென்னையில் தங்கத்தின் விலை 1 வருட சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடதக்கது.
வெள்ளியின் இமாலய சரிவு
இந்தியாவின் முக்கிய சந்தைகளில் நேற்று ஒரு கிலோ வெள்ளியின் விலை சுமார் 120 ரூபாய் வரை குறைந்து 38,848 ரூபாய்க்கு விற்கப்பட்டது. மேலும் சென்னையில் இதன் விலை 50 ரூபாய் அதிகமாக 38,895 ரூபாய்க்கு விற்கப்பட்டது குறிப்பிடதக்கது. இந்த திடீர் விலை குறைவு கடந்த 2010ஆம் ஆண்டு விலை நிலவரத்தை ஒத்து இருந்தது.
தங்கத்தின் ஒரு வருட சரிவு
வெள்ளியை போல் தங்கத்தின் விலையும் ஒரு வருட சரிவை தழுவியது, நேற்றைய வர்த்தக சந்தையின் முடிவில் 22 கேரட் 1 கிராம் தங்கத்தன் விலை 2,525 ரூபாய் என்ற விலை நிலையை எட்டியது. இதே விலையை 2013ஆம் வருடம் ஜூலை மாதம் எட்டியது குறிப்பிடதக்கது.
டாலர் - ரூபாய்
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த ஒரு வார காலமாக 60.70 முதல் 60.90 ரூபாய் வரையில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இன்று இதன் மதிப்பு 60.97 ரூபாய் என்ற நிலையில் நாணய பரிமாற்றம் செய்யப்படுகிறது.
இனி 10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரத்தை இந்தியாவின் முக்கிய நகர வாரியாக பார்க்கலாம்.
ஹைதராபாத்
ஹைதராபாதில் 10 கிராம் தங்கம் ரூ.25,220
பெங்களூரு
பெங்களூரில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.25,200
கொல்கத்தா
கொல்கத்தாவில் 10 கிராம் தங்கம் ரூ.25,230
டெல்லி
தலைநகரமான டெல்லியில் 10 கிராம் தங்கம் ரூ.25,130
சென்னை
நமது சென்னையில் 10 கிராம் தங்கம் ரூ.25,250
மும்பை
மும்பையில் 10 கிராம் தங்கம் ரூ.25,180
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!



Click it and Unblock the Notifications