"ஐ எம் சாரி" வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட "பிளிப்கார்ட் "

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: இந்தியாவின் முன்னணி ஆன்லைன் சில்லறை விற்பனை நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனத்தின் "பிக் பில்லியன் டே" நடந்த குளறுபடிக்கு தனது வாடிக்கையாளர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டார் இந்நிறுவனத்தின் தலைவர்களான சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால்.

சிங்கப்பூரில் பதிவான இந்நிறுவனம், கடந்த 6ஆம் தேதி மிகப்பெரிய அளவில் தள்ளுபடி மற்றும் சலுகை விலைகளை அறிவித்தது, இதற்காக இந்தியாவின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் பெரும் அளவில் விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால் இந்த விற்பனை இந்நிறுவனத்திற்கு சாதமாக அமையவில்லை. இது குறித்து இந்நிறுவன தலைவர்கள் வெளியிட்ட கடிதத்தில்

ஐ எம் சாரி
 

ஐ எம் சாரி

எங்களது வாடிக்கையாளருக்கு பிக் பில்லியன் டே மிகவும் சாதகமாகவும், மகிழ்ச்சி அளிக்க கூடயதாக இருக்கும் என்று நினைத்தோம், ஆனால் அது எதிர்மறையாக அமைந்தது. இதற்கு நாங்கள் மிகவும் வருந்தி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.

பிக் பில்லியன் டே

பிக் பில்லியன் டே

இந்த நாளுக்கும் நாங்கள் பல மாதங்களாக உழைத்தோம், ஆனால் எங்களது கணிப்புகளுக்கும் அப்பார்பட்டு சில விஷயங்கள் நடந்துள்ளது, இதை நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று கூறினர்.

வாடிக்கையாளர்

வாடிக்கையாளர்

அக்டோபர் 6ஆம் நாள் மட்டும் சுமார் 15 இலட்சம் பேர் பிளிப்கார்ட் நிறுவனத்தில் பொருட்களை வாங்கியுள்ளனர். ஆனால் பலர் இச்சலுகையை பயன்படுத்த முடியவில்லை, வாடிக்கையாளரின் நம்பிக்கையை கெடுக்கும் வகையில் இது அமைந்துள்ளது. இது எங்களது நிறுவனத்திற்கு பெரும் இழப்பு.

விலை மாற்றம்

விலை மாற்றம்

சலுகை விலையில் குறிக்கப்பட்ட சில பொருட்களுக்கு திடீரென சாதாரண விலைக்கு மாறியது இதனால் வாடிக்கையாளர் மந்தியில் குழப்பம் ஏற்ப்பட்டது. இதற்கு தொழிற்நுட்ப கோளாறு தான் முக்கிய காரணம் எனவும் அதற்கு தாங்கள் மன்னிப்பு கேட்டார்.

அவுட் ஆஃப் ஸ்டாக்
 

அவுட் ஆஃப் ஸ்டாக்

பல பொருட்கள் வெளியிட்ட சில மணி நேங்களிலேயே விற்று தீர்ந்தது. இதனால் பொருட்கள் தீரும் தருவாயில் பொருட்களை புக் செய்ய பலருக்கு புக் செய்த பொருட்கள் கேன்சல் ஆனது.

புக்கிங் கேன்சல்

புக்கிங் கேன்சல்

நிறுவன இருப்பில் இருக்கும் பொருட்களின் அளவை விட அதிகளவில் புக் செய்யததால் ஆர்டர்கள் கேன்சல் ஆனது. இதற்கு நாங்கள் அனைவருக்கும் பொருட்கள் கிடைக்கும் வகையில் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்று சச்சின் மற்றும் பின்னி பன்சால் தெரிவித்தனர்.

இணையதளம்

இணையதளம்

இந்நாளில் அதிகளவில் அதிக வாடிக்கையாளர்கள் வரும் பட்சத்தில் நாங்கள் முன்கூட்டியே 20 மடங்கு டிராப்பிக்கை தாக்கும் பிடிக்கும் அளவிற்று 5000 சர்வர்களை நிறுவினோம். ஆனாலும் எங்கள் கணிப்பு தவிடுபொடு ஆகும் வகையில் வாடிக்கையாளர் குவிந்தனர். இதனால் 6ஆம் தேதியன்று பிளிப்கார்ட் தளம் பல முறை செயல் இழந்துப்போனது.

உலக மகா நடிப்படா சாமி..

உலக மகா நடிப்படா சாமி..

மக்களிடம் எப்படி எல்லாம் பணத்தை அவர்களுக்கே தெரியாமல் பிடுங்களாம் என்று யோசித்து பணியாற்றிய பன்சால் கூட்டணிக்கு முதல்ல ஒரு சல்யூட். இணையதளம் செயல் இழந்து போனதற்கு விலைஏற்றத்திற்கு முக்கிய காரணம் உண்டு. மேலும் பொருட்களின் விலையை முன்று மடங்கு உயர்ந்தி அதை உண்மையான விலையை விட அதிகமான விலைக்கு விற்று லாபம் பெற்றுள்ளது பிளிப்கார்ட் (எல்லா பொருட்களுக்கும் அல்ல.. சில பொருட்களுக்கும் மட்டும் தான்..)

ஊருக்கு நாளு பேரு

ஊருக்கு நாளு பேரு

இந்த தலைப்பில் ஒரு குறும்படம் வந்துள்ளது, அதில் கூறுவது போலவே. இந்தியாவில் வர்த்தகம் செய்யும் இந்நிறுவனம் எதற்கு இந்தியாவில் பதிவு செய்யாமல் சிங்கப்பூரில் பதிவு செய்ய வேண்டும். அப்படி பன்னாதான் நிறுவனத்தின் மீது எந்த வழக்கு போட்டாலும் தப்பித்துக் கொள்ளலாம்.

சதுரங்க வேட்டை

சதுரங்க வேட்டை

சூது மற்றும் ஏமாற்றுதல் என்பது தற்போது அறிவு சார்ந்த செயலாக பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கும் போது குறைந்த காலத்தில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் மற்றவர்களை ஏமாற்ற வேண்டும். மற்றவர்களை ஏமாற்றுவதன் முதல் படி அவனிடம் முதலில் ஆசையை (ஆஃப்ர், தள்ளுபடி) தூண்ட வேண்டும்.

ஆதிகாலம்

ஆதிகாலம்

பொதுவாக மக்கள் ஆதிகாலம் தொட்டு தள்ளுபடி, ஆஃபர்களை கண்டு மயங்கி வருகின்றனர். இப்படி தள்ளுபடி விலையில் வாங்கும் போது முதலில் அவன் நஷ்டத்திற்கு விற்கமாட்டான் என்று நினைவில்கொள்ள வேண்டும்.

காய்கறி கடைக்காரன்

காய்கறி கடைக்காரன்

தெருவில் வயிற்று பிளைப்பிற்காக காய்கறி, பழங்கள் விற்பவனிடம் பேரம் பேசி வாங்கும் நாம், பெரும் கடைகளில் சத்தம் இல்லாமல் வாங்கி வருவோம். குறிப்பாக இன்றைய இளைஞர்கள் 500ரூபாய் மதிப்புடைய பேன்டை, லீவிஸ் என்ற லேபில் போட்டவுடன் 3,500 ரூபாய் சிரித்துக்கொண்டே வாங்கி வருகின்றனர். இது தான் இன்றைய உலகம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

sachin and binny bansal apologies, from Flipkart

Yesterday was a big day for us. And we really wanted it to be a great day for you. But at the end of the day, we know that your experience was less than pleasant. We did not live up to the promises we made and for that we are really and truly sorry. 
Story first published: Wednesday, October 8, 2014, 16:14 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more