டெல்லி: செப்டம்பர் மாதத்தில் பால் மற்றும் சக்கரை பொருட்களின் விலை குறைந்ததால் உலகளவில் உணவு பொருடகளின் விலை 4 வருட சரிவை தழுவியது என யூனைடெட் நேஷன்ஸின் உணவு ஆய்வுஅமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் செப்டம்பர் மாத விலை நிலையை ஒப்பிடும்போது 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் விலை ஒத்துள்ளது. சக்கரை மற்றும் பால் பொருட்களின் விலை குறைந்துள்ளது, உலகளவில் அதிகளவில்பயன்படுத்தும் இறைச்சி பொருட்களின் விலை கணிசமான அளவில் குறைந்துள்ளது என இவ்வமைப்புதெரிவித்துள்ளது.

மேலும் உணவு மற்றும் விவசாய அமைப்பு மாதமாதம் தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பால்,இறைச்சி மற்றும் சர்க்கரை ஆகியவற்றின் விலை நிலையை கண்காணித்து வருகிறது, இதன் மொத்தசாராசரி அளவீடு 191.5 புள்ளகள். இது கடந்த ஆகஸ்ட் மாதத்தை ஒப்பிடும்போது 2.6 சதவீதம் குறைவு.
மேலும் 2014ஆம் ஆண்டில் தாணிய உற்பத்தி 2.523 பில்லியன் டன் அளவிற்கு அதிகரித்துள்ளது, இவ்வாண்டில் கடந்த மே மாதம் 65 மில்லியன் உற்பத்தியே அதிகம் என உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.
தானியங்கள் மட்டும் அல்லாமல் கோதுமை உற்பத்தியும் 718.5 மில்லயன் டன்களாக உயர்ந்துள்ளதை சூட்டிகாட்டியுள்ளது.
ஆனால் இந்தியாவை பொருத்தவரை, இந்த கணிப்புகளில் அதிகளவில் வித்தியாசம் உள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். சில மாதங்களுக்கும் முன்பு இந்தியாவில் உணவு பணவீக்கம் அதிகளவில் இருந்ததால் காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்தது குறிப்பிடதக்கது.


Click it and Unblock the Notifications