அடுத்த தலைமுறை அம்பானிகளின் கைகளுக்கு மாறிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்!!

மும்பை: இந்தியாவில் மிகப்பெரிய தனியார் நிறுவனங்களில் ஒன்றான முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் முக்கிய துறைகளில் அடுத்த தலைமுறையின் கட்டுப்பாட்டுகுள் வந்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு நிறுவனத்தின் உயர்மட்ட குழுவில் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி இணைந்ததை தொடர்ந்து முகேஷ் அம்பானி அவர்களின் மகள் மற்றும் மகன் நிறுவன பொறுப்புகளில் இணைந்துள்ளனர்.

அடுத்த தலைமுறை

அடுத்த தலைமுறை

அமெரிக்காவில் பட்டபடிப்பை முடித்து விட்டு மெக்கன்சி நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஈஷா அம்பானியும், ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனத்தில் பயிற்சி பெற்றுவந்த ஆகாஷ் அம்பானியும் ரிலையன்ஸ் இன்போகாம் மற்றும் ரிலையன்ஸ் சில்லறை வர்த்தகத்தின் நிர்வாக குழுவில் இணைந்தனர்.

ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம்

ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம்

இந்தியா முழுவதும் 2015ஆம் ஆண்டில் அதிவேக தொலைதொடர்பு இணைப்பான 4ஜி சேவையை துவக்க ரிலையன்ஸ் முடிவு செய்துள்ளது. இதற்காக 2014ஆம் வருட இறுதிக்குள் 70,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது இந்நிறுவனம். இந்நிறுவன பணிகளில் துவக்க காலகட்டத்தில் இருந்து ஆகாஷ் அம்பானி பணியாற்றி வருவதன் மூலம் நிறுவனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி மற்றும் புதிய சேவைகளின் துவக்கத்தில் நிர்வாக குழு சார்பில் இவரின் பங்கு அதிகளவில் இருக்கும் என ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம்

ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம்

சில்லறை வணிகத்தில் இந்நிறுவனம் களம் இறங்கி ஒரு வருடமே ஆன நிலையில் இந்நிறுவனம் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. இந்நிறுவனம் சில்லறை வணிகத்தில் முறையான மற்றும் தெளிவான திட்டங்கள் இல்லாத காரணத்தினால் பல நகரங்களில் உள்ள கடைகளை இந்நிறுவனம் மூடியுள்ளது.

ஆகாஷ் அம்பானி

ஆகாஷ் அம்பானி

இவர் தனது படிப்பை அமெரிக்காவின் பிரவுன் பல்கலைகளத்தில் முடித்துவிட்ட சில நாட்களில் ரிலையன்ஸ் டெலிகாம் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்களின் உயர்மட்டக் குழுவில் பணியாற்ற துவங்கினார்.

ஈஷா அம்பானி

ஈஷா அம்பானி

ஈஷா அம்பானி சவுத் ஆசியன் ஸ்டெடீஸ் மற்றும் உளவியல் துறையில் அமெரிக்காவின் யேல் பல்கலைக்களகத்தில் பட்டம் பெற்றுள்ளார். ஆகாஷ் ஆம்பானியை போல் நிறுவனத்தில் சேருவார் என்று பலரும் நினைத்தனர். இந்நிலையில் வெளிஉலக அனுபவம் மற்றும் சந்தையில் நேரடி அனுபவம் ஆகியவற்றை தெரிந்துக்கொள்ள அமெரிக்காவில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

அனந்த் அம்பானி

அனந்த் அம்பானி

முகேஷ் அம்பானியின் இளைய மகனான அனந்த் அம்பானி தற்போது அமெரிக்காவில் படித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

உண்மையான குடும்ப வியாபாரம்

உண்மையான குடும்ப வியாபாரம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தற்போது முகேஷ் அம்பானி குடும்பத்தில் அவரது இளைய மகனான அனந்து அம்பானி கூடிய விரைவில் படிப்பை முடித்து விட்டு நிறுவனத்தில் இணைவார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+