மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் வேலை செய்வதற்கும் படிப்பதற்கு விசா பெற குட்டிக்கரனம் போட்டவர்கள் பல பேர் உண்டு, ஆனால் இனி இந்நிலை கண்டிப்பாக மாறிவிடும். அந்நாட்டு அரசின் போட்டித்தன்மை மற்றும் புதுமைத் திட்டங்களை ஊக்கப்படுத்தும் திட்டத்துடன் ஆஸ்திரேலியவின் விசா மற்றும் குடியேற்றங்களுக்கான கட்டுப்பாடுகளையும் தளர்த்தி உள்ளது.
ஒரு பக்கம் விசா தொடர்பான முறைகேடுகளின் மேல் கடும் நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுத்து வந்தாலும், விசா வழங்குவதில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தப்படுகிறது என அந்நாட்டின் பிரதமர் டோனி அபோட் தெரிவித்தார்.
பிஸ்னஸ் மற்றும் வெர்கிங் விசா
புதிய திட்டங்கள் மூலம் வியாபாரம் மற்றும் வர்த்தகத்திற்காக ஆஸ்திரேலியாவிற்கு வருபவர்களுக்கு விசா வழங்கும் 457 சட்டத்திட்டங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி அதிகாப்படியான மக்கள் ஆஸ்திரேலியாவிற்கு செல்ல முடியும். அதேபோல் தற்காலிக விசாவாக திறன் அடிப்படையாக கொண்ட பணியாளர்களுக்கு விசா வழக்குவதிலும் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள்
இந்த திட்டமிட்ட மாற்றத்தில் புதிய கட்டுப்பாடுகளும் அடக்கம், குறைந்த ஆபத்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு வழங்கும் ஸ்பான்சர், மற்றும் நியமனங்களை ஒழுங்குபடுத்துதல், ஆங்கில மொழி தேர்வில் தளர்ச்சி செய்தல் மற்றும் விண்ணப்பதாரர்களுக்கும் தேவையான திறன்களில் தளர்வு செய்தல் ஆகியவை அடங்கும்.
ஸ்பான்சர்
அஸ்திரேலியாவில் புதிய வியாபாரத்தை துவங்கும் போது, ஸ்பான்சர் வழங்கும் காலத்தை 12 மாதங்களிலிருந்து 18 மாதங்களாக அது உயர்த்த திட்டமிட்டுள்ளது அந்நாட்டு அரசு இதன் மூலம் வியாபாரத்தை நிலைப்படுத்த அதிகப்படியான கால அவகாசம் கிடைக்கும்.
457 திட்டம்
"இந்த 457-க்கான திட்டம் உள்ளூர் சந்தையில் ஏற்பட்டுள்ள வர்த்தகத்தை பாதிக்கும் திறன் பற்றாக்குறையை நிரப்பும் திட்டமாக இருக்கும்" என்று பிரதமர் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு குறிப்பிட்டுள்ளது.
ஊதிய வித்தியசாம்
ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஆஸ்திரேலிய நாட்டவர் வேலையை செய்யும் போது அதே இடத்தில் பிற நாட்டவருக்கும் ஒரே மாதிரியான சம்பளம் மற்றும் பாதுகாப்பு அளிப்பதை உறுதிப்படுத்தியுள்ளது ஆஸ்திரேலிய அரசு.


Click it and Unblock the Notifications