மும்பை: தமிழ்நாடு மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் தற்போது இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை மின் பற்றாக்குறை மற்றும் நிதி பற்றாக்குறை. நிதி பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசு அன்னிய முதலீட்டுகளை ஈர்க்கும் வண்ணம் பல திட்டங்களை தீட்டியுள்ளது. இதன் வெளிப்பாடு அடுத்த 5 முதல் 10 வருடங்களில் தெரியும். ஆனால் மின் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.
இப்பற்றாக்குறையை சமாளிக்கவும், இந்தியாவில் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்கவும் மத்திய திட்டமிட்டுள்ளது. இத் திட்டத்தின் மூலம் அடுத்த 5 வருடத்திற்கு இந்தியாவில் மின் உற்பத்தி மற்றும் அட்டோமேஷன் நிறுவனங்களுக்கு மைக்ரோ கிரிட்ஸ் அமைக்கும் பணியில் அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
மைக்ரோ கிரிட்ஸ்
இந்தியாவில் அனைத்து இடங்களுக்கும் குறிப்பாக கிராமங்களுக்கு மின்சாரம் கிடைக்க இருக்கும் ஒரே வழி மைக்ரோ கிரிட்ஸ் தான். இன்னும் இந்தியாவில் 1000திற்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் இல்லை. இப்பகுதிகளில் மைக்ரோ கிரிட் அமைக்கு பணியில் பல நிறுவனங்களுக்கு வாய்ப்புகள் உள்ளது என்று ஏபிபி நிறுவன தலைவர் தெரிவித்தார்.
10 மெகா வாட் கிரிட்
2-3 மெகாவாட் கிரிட் அமைப்பதன் மூலம் 5,000 வீடுகளுக்கு மின்சாரம் அளிக்க முடியும் இதில் மின்சாரா உற்பத்தி சாதனம், மின்சார சேமிப்பு சாதனம் மற்றும் லோடு மேனேஜ்மென்ட் சிஸ்டம் ஆகியவை அடங்கும். மேலும் 10மெகாவாட் கிரிட் அமைப்பதன் மூலம் 25,000 வீடுகளுக்கு மின்சாரம் அளிக்கு முடியும். இதன் மூலம் எளிதாக கிராம மக்கள் மின்சாரம் பெறுவர்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி
மேலும் இதில் இணைக்கப்படும் மின்சாராம் அதிகளவில் காற்று மற்றும் சோலார் மூலம் பெறப்படும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியாக இருக்கும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நேனோ கிரிட்
வாட்டர் பம்பு மற்றும் சோலார் பேனல் இணைக்கப்பட்ட நேனோ கிரிட் இந்தியாவில் பிரபலமாக இருந்தாலும், மைக்ரோ கிரிட் தான் அமைக்கப்பட்ட உள்ளது. இத்திட்டத்தை மேம்படுத்தும் பணியில் நேனோ கிரிட் அமைக்கப்படவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
24X7 மின்சாரம்
இத்திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் தடையில்லா மின்சாரம் கிடைக்கும். மேலும் இந்திய கிராமங்களில் மின்சாரம் கிடைப்பதன் மூலம் விவசாயம் மற்றும் மக்களின் வாழ்க்கை தரம் உயரும். அதுமட்டும் அல்லாமல் அடுத்த 1 வருடத்திற்குள் மின்சாரத்துறையில் வேலைவாய்ப்பு கணிசமாக உயரும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications