டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகளை கண்கானிக்கும் வகையில் வங்கிகளின் தலைவர்களை வருகிற நவம்பர் 5ஆம் தேதி டெல்லியில் சந்திக்க உள்ளார்.
மேலும் இக்கூட்டம் மிகவும் சிறப்புவாய்ந்த ஒரு கூட்டமாக கருதப்படுகிறது. ஏனென்றால் அது வரை இந்தியாவில் எந்த ஒரு பிரதமரும் வங்கி தலைவர்களை தனியாக சந்தித்தில்லை, இதுவே முதல் முறை.
8 தலைகள்
மேலும் இக்கூட்டம் 8 பொதுத்துறை வங்கிகளின் தலைவர்கள் இல்லாத நேரத்திலும், வங்கிகள் மாற்றத்திற்காக ஏங்கும் நேரத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தின் முடிவில் வங்கித்துறையில் புதிய மற்றும் முக்கிய மாற்றங்கள் எடுக்கப்படும்.
அருண் ஜேட்லி மற்றும் ரகுராம் ராஜன்
இக்கூட்டத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி கலந்து கொள்ள உள்ளார், கடந்த வாரம் இக்கூட்டத்தில் கலந்து கொள்வதாக அறிவித்த ரகுராம் ராஜனின் வருகை இன்னும் உறுதியாகவில்லை என்று அரசு துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
30 வராக்கடன் கணக்குகள்
அனைத்து வங்கிகளில் உள்ள டாப் வராக்கடன்கள், அதாவது அதிக தொகை கொண்ட வராக்கடன் பற்றிய முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளதாகவும், இக்கணக்காளர்களின் மீது நடவடிக்கை எடுக்கவும் திட்டமிடவும் உள்ளதாக சில நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பணி நியமனம் ரத்து
திங்கட்கிழமை நிதியமைச்சகம், தகுதி குறைபாடுக் காரணமாக ஐக்கிய முற்போக்கு ஆட்சியில் நியமிக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளின் 8 வங்கி தலைவர்கள், 14 நிர்வாக இயக்குனர்கள் பணி நீக்கம் செய்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த வங்கித்துறையும் கலக்கத்தில் உள்ளது.
மன்மோகன் சிங்
கடந்த 10 வருட ஆட்சியில் நிதியியல் துறை வல்லுனரான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஒரு முறை கூட வங்கித்தலைவர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்ததில்லை என்பது குறிப்பிடதக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications