மும்பை: தங்கத்தின் விலை 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலைச் சரிவைச் சந்தித்துள்ளது. இன்று மும்பை தங்கம் மற்றும் வெள்ளிச் சந்தையில் 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 26,000 ரூபாய்க்கும் குறைவாக விற்கப்படுகிறது. இதனால் மக்கள் அதிகளவில் தங்கத்தை வாங்கத் தொடங்கியுள்ளனர்.
ஆனால் விற்பனையாளர் தங்களின் முதலீட்டுக்கு அடி விழாமல் இருக்க தங்க இருப்பைக் குறைக்காமல் உள்ளனர். இதனால் மும்பை சந்தையில் தங்கத்தின் விற்பனை மந்தமாக உள்ளது.
வெள்ளி
தங்கத்தை போல வெள்ளியின் விலையும் 36,700 ரூபாய் வாக்கில் குறைந்துள்ளது. இந்த வார துவக்கத்தில் இதன் விலை 40,500 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
டாலர் மதிப்பு சரிவு
இத்தகைய விலை குறைவிற்கு முக்கிய காரணம் டாலர் மதிப்பு சரிவுதான் என சந்தை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் சுவிஸ் வங்கிகள் அதிகளவில் தங்கத்தை இறக்குமதி செய்துள்ளனர். இதன் மூலம் இந்நியாவில் அடுத்த சில மாதங்களில் தங்கத்தின் விலை அதிகளவில் குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம்
சென்னையில் விலை குறைவின் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் வர்த்தகம் சிறப்பாக உள்ளது. மேலும் இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கத்தின் விலை நிலவரத்தை இப்போது பார்போம்.
விலை நிலவரம்
22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை நேற்று 59 ரூபாய் சரிந்து 2463 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல் 24 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 2637.00 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஹைதராபாத்
ஹைதராபாதில் 10 கிராம் தங்கம் ரூ.24,700
பெங்களூரு
பெங்களூரில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.24,680
கொல்கத்தா
கொல்கத்தாவில் 10 கிராம் தங்கம் ரூ.24,740
டெல்லி
தலைநகரமான டெல்லியில் 10 கிராம் தங்கம் ரூ.24,510
சென்னை
நமது சென்னையில் 10 கிராம் தங்கம் ரூ.24,630
மும்பை
மும்பையில் 10 கிராம் தங்கம் ரூ.24,550
More From GoodReturns

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!



Click it and Unblock the Notifications