டெல்லி: மத்திய அரசு நடப்பு கணக்கு பற்றாக்குறையின் வலுவான நிலையை கருத்தில் கொண்டு புல்லியன் வர்த்தகத்திற்கு சாதகமாக, தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி வரியை குறைத்துள்ளது. இதன் மூலம் நாட்டில் இனி அதிகாளவிலான தங்கம் இறக்குமதி செய்யப்படும் எனவும், அடுத்த சில மாதங்களில் இதன் இறக்குமதி வரிகள் மேலும் உயர்த்தப்படும் எனவும் தெரிகிறது.
நிதி அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையின் படி 10 கிராம் தங்க இறக்குமதிக்கு 391 டாலரும், 1 கிலோ வெள்ளிக்கு 551 டாலருமாக இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி வரி
இதற்கு முன் இறக்குமதி வரி 10 கிராம் தங்கத்திற்கு 401 டாலரகாவும், ஒரு கிலோ வெள்ளிக்கு 575 டாலராகவும் இருந்தது குறிப்பிடதக்கது.
பண்டிகை காலம்
தீபாவளி பண்டிகைக்கு பின் தங்க மற்றும் வெள்ளி இறக்குமதி வரியில் கண்டிப்பாக அதிகரிப்பு இருக்கும் என தெரிவித்த மத்திய நிதியமைச்சகம், நடப்பு கணக்கின் வலுவான நிலையை கருத்தில் கொண்டு வரியை குறைத்துள்ளது. மேலும் இதற்கான அறிக்கையை நிதியமைச்சகம், மத்திய கலால் வரி மற்றும் சுங்கத்துறையிடம் அளித்துள்ளது.
நியூயார்க் சந்தை
மேலும் சனிக்கிழமை நியூயார்க் சந்தையில் தங்கம் விலை 2.3 சதவீதம் குறைந்தது, அதைபோல் வெள்ளியின் விலை 1.73 சதவீதம் குறைந்தது இதனால் தங்க மற்றும் வெள்ளி இறக்குமதியாளர்களுக்கு டபுல் கொண்டாட்டமாக உள்ளது.
அப்ப இந்தியாவில்?
நியூயார்க் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்ததை அடுத்து இந்தியாவில் 10 கிராம் தங்கம் 26,550 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளியின் விலை 36,250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இறக்குமதி
இந்தியாவில் பெர்ரோலியா பொருட்களுக்கு அடுத்து அதிகளவில் இறக்குமதி செய்யப்படும பொருள் தங்கம் மற்றும் வெள்ளி தான். மேலும் பண்டிகை காலமான செப்டம்பர் மாதத்தில் மட்டும் இந்தியாவில் சுமார் 95 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications