மும்பை: இன்று காலை வர்த்தகம் துவங்கிய சில மணிநேரங்களில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 144 புள்ளிகள் வரை உயர்ந்து 28004.51 புள்ளிகளை எட்டி புதிய சாதனையை படைத்தது.
மேலும் இன்று காலை வர்த்தகத்தில் ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி, சன் பார்மா, எஸ்பிஐ வங்கி மற்றும் எல் அண்ட் டி ஆகிய நிறுவனங்களின் வர்த்தகம் சிறப்பாக இருந்தது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலவே 50 நிறுவனங்கள் கொண்ட பட்டியலிலான நிஃப்டி இன்று வர்த்தகம் துவங்கிய முதல் சுமார் 30.40 புள்ளிகள் வரை உயர்ந்து 8,354.55 என்ற அளவை எட்டியது.
தொடர் வெற்றி
மேலும் மும்பை பங்குச்சந்தை கடந்த நான்கு வர்த்தக நாட்களிலும் புதிய சாதனைகளை படைத்து வருவது குறிப்பிடதக்கது. மேலும் நிஃப்டி குறியீட்டில் சில ஏற்ற தாழ்வுகள் இருந்தாலும், வர்த்தக நாள் முடிவில் புதிய இடங்களையே எட்டுகிறது.
பாங்க் ஆஃப் ஜப்பான்
இந்திய சந்தையில் ஜாப்பான் நாட்டு நிறுவனங்கள் திங்கட்கிழமை முதல் முதலீடு செய்ய துவங்கியுள்ளதால் இந்திய பங்கு சந்தையில் வர்த்தகம் சூடுப்பிடித்துள்ளது. இதே போல் பாங்க் ஆஃப் ஜாப்பான் இந்திய சந்தையில் பல புதிய முதலீட்டுத் திட்டங்களை துவங்கியுள்ளதால் உலக நாடுகளின் முதலீட்டை அதிகளவில் கவரும் வண்ணம் இந்தியா உள்ளது.
எண்ணெய் விலை
கடந்த மாதம் அமெரிக்க சந்தையில் எண்ணெய் விலை அதிகளவில் குறைந்ததால் இந்தியாவின் செலவிணம் அதிகளவில் குறைய வாய்ப்புள்ளது. இதனால் பணவீக்கத்தின் அளவு மேலும் குறையும். இதுமட்டும் அல்லாமல் உலக சந்தையில் எண்ணெயின் விலை நான்கு வருட விழ்ச்சியை சந்தித்துள்ளது.
தங்கம்
மேலும் கடந்த 5 நாட்களாக உலக சந்தைகளில் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்த வண்ணமே உள்ளது, இதன் மூலம் உலக நாட்டின் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதிக்காக டாலர் பயன்பாடு குறைந்துள்ளது. மேலும் பல முக்கிய புல்லியன் நிறுவனங்கள் தங்கத்தின் மீதான வர்த்தகத்தில் மந்தநிலையில் உள்ளது.
இந்தியாவில் தங்க வர்த்தகம்
உலக சந்தையில் டாலர் பயன்பாடு குறைந்ததாலும், தங்கம் வர்த்தகம் குறைந்ததாலும் இந்தியாவில் தங்கம் விலை 4 வருட சரிவை சந்தித்துள்ளது. இத்தகைய சாதகமான நிலையை கருத்தில் கொண்டு மத்திய அரசு தங்க இறக்குமதிக்கான வரியை குறைத்துள்ளது.


Click it and Unblock the Notifications