டெல்லி: மத்திய அரசு இந்திய வங்கிகளில் இருக்கும் தனது முதலீட்டு இருப்பை 52 சதவீதமாக குறைத்துக்கொள்ளவதன் மூலம் கூடதலாக சுமார் 89,120 கோடி நிதி திரட்ட முடியும் என மத்திய நிதியைச்சகத்தின் துணை நிதியமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.
மத்திய அரசு, பொதுத்துறை வங்கிகளில் 56 சதவீதம் முதல் 84 சதவீதம் வரை முதலீட்டு பங்குகளை கொண்டுள்ளது. இதன் மதிப்பு மட்டும் இந்தியாவில் மொத்த கடன் தொகையில் (1 டிரில்லியன் டாலர்) 70 சதவீதம் ஆகும்.
பரிந்துரை
மத்திய அரசு அனைத்து பொதுத்துறை வங்கிகளிலும் முதலீட்டு பங்குகளை 52 சதவீதமாக குறைப்பதன் மூலம் 89,120 கோடி ரூபாய் நிதி திரட்டமுடியும் என மத்திய அமைச்சகத்திற்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட்
மேலும் இத்தொகை மத்திய அரசு வெளியிடும் பு2015-16ஆம் ஆண்டுக்கான புதிய பட்ஜெட்டுக்கு பெரிதும் உதவும் என அவர் கூறினார்.
26 பொதுத்துறை வங்கிகள்
இந்தியாவில் செயல்படும் 26 பொதுத்துறை வங்கிகளுக்கு அடுத்த சில வருடங்களில் பெருகிவரும் வராக் கடனை சமாளிக்க சுமார் 60 பில்லியன் டாலர் தேவை எனவும் அவர் கூறினார்.
2.4 டிரில்லியன் டாலர்
மேலும் ரிசர்வ் வங்கியின் சமிபத்திய தகவல் படி மார்ச் 2019ஆம் ஆண்டிற்குள் பொதுத்துறை வங்கிகளுக்குள் சுமாக் 2.4 டிரில்லியன் டாலர் பணத்தை உட்செலுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
பங்கு விற்பனை
மேலும் வங்கிப் பங்கு இருப்புகளை குறைப்பது குறித்த முடிவுகளை பிரதமர் நரேந்திர மோடி இருதியாக முடிவு செய்தார்.


Click it and Unblock the Notifications