41 மாத உயர்வை தொட்ட தங்க இறக்குமதி!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: நவம்பர் மாதம் முழுவதும் விழாக்காலம் மற்றும் திருமண நிகழ்வுகளின் காரணமாக இந்தியாவில் தங்க இறக்குமதி சுமார் 39 மெட்ரிக் டன் என்ற அளவில் உயர்ந்து 41 மாத உயர்வை எட்டியுள்ளது.

 

மேலும் கடந்த வெள்ளிக்கிழமை ரிசர்வ் வங்கி நாட்டின் வலுவான பணவீக்கத்தை கருத்தில் கொண்டு தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் விலக்கிக்கொண்டது. இதனால் அடுத்து வரும் மாதங்களில் தங்க இறக்குமதி மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.

மே 2011

மே 2011

நிலையான டாலர் மதிப்பு, இறக்குமதியில் தளர்வு மற்றும் உலக சந்தைகளில் தங்கத்தின் விலை சரிவு போன்ற காரணங்களால் கடந்த மே 2011ஆம் மாதம் தங்க இறக்குமதி 40.2 மெட்ரிக் டன்னாக இருந்தது.

வெள்ளி இறக்குமதி

வெள்ளி இறக்குமதி

நவம்பர் மாதத்தில் வெள்ளி இறக்குமதி ஒரு வருட உயர்வை எட்டியுள்ளது. கடந்த ஒரு மாத்தில் மட்டும் இந்தியா சுமார் 203 மெட்ரிக் டன் வெள்ளியை இறக்குமதி செய்துள்ளது இதே காலகட்டத்தில் கடந்த வருடம் வெறும் 163 மெட்ரிக் டன் மட்டுமே இறக்குமதி செய்துள்ளது.

கட்டுப்பாடுகளின் விளைவு
 

கட்டுப்பாடுகளின் விளைவு

நவம்பர் மாதத்தில் தங்க இறக்குமதி அதிகரித்ததற்கு முக்கிய காரணம் பண்டிகை மற்றும் திருமண காலங்கள் மட்டும் இல்லை. தங்க வியாபாரிகளிடம் நிலவும் பயம் தான். மத்திய அரசு தங்க இறக்குமதியை மேலும் கடுமையாக்கி விடுமோ என்ற அச்சத்தினால் கடந்த மாத கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி அதிகளவிலான தங்கத்தை இறக்குமதி செய்துள்ளனர்.

20:80 திட்டம்

20:80 திட்டம்

கடந்த வாரம் இந்தியாவில் பெரு நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்கள் 20:80 திட்டத்தை முறைகேடாக பயன்படுத்தவதனால் இத்திட்டத்தை உடனடி உத்திரவின் பேரில் விலக்கிக் கொண்டது ரிசர்வ் வங்கி.

தங்க விலை

தங்க விலை

இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உலக சந்தைகளின் வர்த்தகத்தை பொருத்தே அமைக்கிறது. உள்நாட்டு வர்த்தகத்தில் இதன் விலையில் அதிகளவிலான தாக்கம் இல்லை என வல்லுனர்கள் தெகரிவித்து வருகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold imports at 41-month high in Nov

The bullion business continues to be on high as the state recorded the highest gold imports in 41 months of more than 39 metric tonnes (MT) in November with the festive and marriage season fuelling the demand for otherwise dull market a few months ago. 
Story first published: Tuesday, December 2, 2014, 11:23 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X