4 பொதுத்துறை வங்கிகளின் புதிய தலைவர்கள் நியமனம்!! அருண் ஜேட்லி

டெல்லி: புதன்கிழமையன்று மத்திய அரசு, நான்கு பொதுத்துறை வங்கிகளின் புதிய தலைவர்களின் பெயர்களை அறிவித்தது. இவர்களின் நியமனம் பொதுத்துறை வங்கிகளின் வளர்ச்சி அதிகரிக்குவும் மற்றும் வராக் கடன் அளவை குறைக்க உறுதுணையாக இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கடந்த இரண்டு நாட்களாக பொதுத்துறை வங்கி தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை கூட்டத்தில் கலந்துக்கொண்டார். இக்கூட்டத்தின் முடிவில் புதிய தலைவர்களின் நியமனம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.

ஆர். கோடிஸ்வரன்

ஆர். கோடிஸ்வரன்

நிதியமைச்சரின் அறிவிப்பின் படி இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் தலைவராக ஆர். கோடிஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா

யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா

இந்தியன் ஒவர்சீஸ் வங்கியை தொடர்ந்து பி. ஸ்ரீநிவாஸ் அவர்களை யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், நிர்வாக இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அனிமேஷ் சவுகான்

அனிமேஷ் சவுகான்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் மற்றொரு வங்கியான ஒரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் வங்கியின் தலைவராக அனிமேஷ் சவுகான் நியமிக்கப்பட்டுள்ளார்.

விஜயா வங்கி

விஜயா வங்கி

மேலும் விஜயா வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், நிர்வாக இயக்குனராகவும் கிஷோர் சான்சி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

நிலுவையில் 4 வங்கிகள்

நிலுவையில் 4 வங்கிகள்

மீதமுள்ள வங்கிகளில் சிண்டிகேட் வங்கியின் தலைவரின் பெயரை அடுத்த சில நாட்களில் வெளியிடுவோம் என்றும், பாங்க் ஆஃப் பரோடா, பஞ்சாம் நேஷ்னல் பாங்க் மற்றும் கனரா வங்கியின் தலைவர்களின் நியமனத்தை அறிவிக்க சில வாரங்கள் தேவை எனவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

தனியார் வங்கிகள்

தனியார் வங்கிகள்

மேலும் மீதமுள்ள நான்கு வங்கிகளின் தலைவர்களை தனியார் வங்கித்துறையில் பணியாற்றும் தலைவர்களை நியமிக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

வளர்ச்சியை மையப்படுத்தும் மத்திய அரசு

வளர்ச்சியை மையப்படுத்தும் மத்திய அரசு

தனியார் வங்கி அதிகாரிகளை நியமிக்கும் போது பொதுத்துறை வங்கியின் வளர்ச்சி மிகவும் சிறப்பாக இருக்கும், மேலும் வங்கியின் வருமானம் மற்றும் இருப்பு தொகை கண்டிப்பாக அதிகரிக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+