மும்பை: இந்திய அன்னிய செலாவணிக் கையிருப்பு ஜனவரி 9 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 236 மில்லியன் டாலர் உயர்ந்து 319.47 பில்லியன் டாலராக உள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில் உலக சந்தைகளில் நிலவிய மந்தநிலை காரணமாக அன்னிய முதலீட்டின் அளவு 471 மில்லியன் டாலர் அளவுக்குக் குறைந்து 319.23 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கியின் வாராந்திர புள்ளிவிவரக் கையேட்டில் அன்னிய செலாவணி இருப்பில் முக்கிய அங்கம் வகிக்கும் அன்னிய செலாவணிச் சொத்துக்கள் 308.5 மில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்து 294.84 பில்லியன் டாலராக நடப்பு வாரத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.

இது கடந்த வாரத்தில் (ஜன 2) 863 மில்லியன் டாலர் அளவுக்குக் குறைந்து 294.53 பில்லியன் டாலர் என்ற அளவில் குறைந்தது.
அதேபோல் சர்வதேச நாணய நிதியத்தில் (IMF) இந்தியாவின் இருப்பு தத்தம் வாரத்தில் 15.4 மில்லியன் டாலர் குறைந்து 1.12 பில்லியன் டாலராக இருந்தது.
ஸ்பெஷல் டிராயிங் ரைட்ஸ் (SDR) எனப்படும் சிறப்பு எடுப்பு உரிமை மதிப்பு 56.7 மில்லியன் டாலர் அளவிற்கு குறைந்து 4.12 பில்லியன் டாலராக இருந்தது.
தங்கத்தின் இருப்பு மதிப்பு, மாற்றம் ஏதுமின்றி 19.37 பில்லியன் டாலராக இருந்தது. இது கடந்த வாரத்தில் 392 மில்லியன் டாலர் அதிகரித்து 19.37 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
குட்ரிட்டன்ஸ்
இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.
More From GoodReturns

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!



Click it and Unblock the Notifications