2 மாதத்தில் 15,000 கோடி ரூபாய் கடன் பெற்ற என்.டி.பி.சி
டெல்லி: மத்திய அரசின் அனல் மின் உற்பத்தி நிறுவனமான என்.டி.பி.சி நிறுவனத்திற்கு பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா 10,000 கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தம் 15 வருட காலத்திற்கு நீடிக்கும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், இத்தொகையை இந்நிறுவனத்தின் விரிவாக்க பணிகளுக்காக பயன்படுத்த என்.டி.பி.சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Indices
கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்நிறுவனத்தின் வரிவாக்க பணிகளுக்காக சுமார் 15,000 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.
இதில் பாங்க் ஆஃப் பரோடா வங்கி மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கியிடம் தலா 2,000 கோடி ரூபாய் கடனுக்கான ஒப்பந்தமும், சிண்டிகேட் வங்கியிடம் 1,000 கோடிக்கான கடன் ஒப்பந்தமும் செய்துள்ளது என்டிபிசி நிறுவனம்.


Click it and Unblock the Notifications