மும்பை: உலக நாடுகளில் நிலவும் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக தங்கத்தின் விலை உலக சந்தையில் 5 மாத உயர்வை எட்டியுள்ளது. இதனால் நாட்டில் தங்க நகை மற்றும் நாணயங்களின் ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக புல்லியன் வர்த்தக அமைப்புகள் தெரிவிக்கிறது.
மேலும் கடந்த 4 மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவை தழுவிய நிலையில், 2015ஆம் ஆண்டின் துவக்கம் முதல் சந்தையில் தங்கத்தின் விலை உயர துவங்கியுள்ளது. இந்த திடீர் உயர்விற்கு முக்கிய காரணமாக அமைந்தது டாலர் மதிப்பின் நிலையான தன்மையும், உலக சந்தைகளில் நிலவும் பொருளாதார பிரச்சனைகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் சந்திக்கும் நிதிநெருக்கடியே ஆகும்.
அதுமட்டும் அல்லாமல் ஐரோப்பிய சென்டரல் வங்கி தன் நாட்டின் பொருளாதார நிலையை சீர்ப்படுத்த தங்கத்தின் மீதான முதலீட்டை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
தங்கம்
கடந்த இரு வாரகாலத்தில் தங்கத்தின் விலையில் பல ஏற்ற இறக்கங்கள் சந்தித்தாலும் பெருவாரியாக உயர்வு மட்டுமே காணப்பட்டது. இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி 1 கிராம் ரூ.2,743 ஆக இருந்த தங்கத்தின் விலை, இன்று ரூ.2,848 வரை உயர்ந்துள்ளது.
வெள்ளி
அதேபோல் ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 420 ரூபாய் அதிகரித்து 39,855 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
டாலர் - ரூபாய்
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு வார காலமாக 61.96 முதல் 61.62 ரூபாய் வரையில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இன்று இதன் மதிப்பு 61.55 ரூபாய் என்ற நிலையில் நாணய பரிமாற்றம் செய்யப்படுகிறது.
இனி 10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரத்தை இந்தியாவின் முக்கிய நகர வாரியாக பார்க்கலாம்.
ஹைதராபாத்
ஹைதராபாதில் 10 கிராம் தங்கம் ரூ.26,720
பெங்களூரு
பெங்களூரில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.26,690
கொல்கத்தா
கொல்கத்தாவில் 10 கிராம் தங்கம் ரூ.26,660
டெல்லி
தலைநகரமான டெல்லியில் 10 கிராம் தங்கம் ரூ.26,550
சென்னை
நமது சென்னையில் 10 கிராம் தங்கம் ரூ.26,630
மும்பை
மும்பையில் 10 கிராம் தங்கம் ரூ.26,580
குட்ரிட்டன்ஸ்
இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.
More From GoodReturns

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?



Click it and Unblock the Notifications