ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்தது
சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ224 குறைந்து காணப்பட்டது.
தங்கம் விலையில் கடந்த சில நாட்களாக ஏற்றம் காணப்பட்டது. கடந்த 19-ந் தேதி ஒரு பவுன் ரூ.21 ஆயிரத்தை கடந்தது. அன்று ரூ.21 ஆயிரத்து 56 ஆக இருந்தது.

அதை தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வந்தது. 23-ந்தேதி ஒரு பவுன் ரூ.21 ஆயிரத்து 328 ஆக இருந்தது. நேற்று பவுனுக்கு ரூ.48 குறைந்து ரூ.21 ஆயிரத்து 280 ஆனது.
இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.224 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.21 ஆயிரத்து 56 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.28 குறைந்தது. ஒரு கிராம் ரூ.2,632-க்கு விற்கிறது.
சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் பங்கு சந்தையில் அதிக முதலீடு காரணமாக தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications