பெங்களுரூ: உலக சந்தையில் நிலவும் மந்தமான வர்த்தகத்தாலும், தங்கத்தின் தேவை குறைந்ததாலும் புல்லியன் சந்தையில் வியாழக்கிழமை 10 கிராம் தங்கத்தின் விலை 120 ரூபாய் குறைந்து 28,300 ரூபாய் என்ற விலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
தங்கத்தை போல வெள்ளியின் விலையிலும் இன்றைய வர்த்தகத்தில் சரிவை சந்தித்தது, ஒரு கிலோ வெள்ளியின் விலை 420 ரூபாய் சரிந்து 39,100 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

விலை சரிவை குறித்து வர்த்தகர்கள் கூறுகையில் உள்நாட்டுச் சந்தையில் தங்கம் மற்றும் தங்க நகைகளின் தேவை குறைந்ததாலும், உலக சந்தையில் நிலவும் மந்தமான வர்த்தகத்தாலும், டாலர் மதிப்பு உயர்வதாலும் இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சரிந்துள்ளது.
மேலும் உள்நாட்டு தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யும் சிங்கப்பூர் சந்தையில் தங்கத்தின் விலை 0.5 சதவீதம் சரிந்து ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,278.27 டாலர் என்ற விலையில் விற்கப்பட்டது. இதேபோல் வெள்ளியின் விலையிலும் 0.9 சதவீதம் சரிவு கண்டது.
இன்றைய வர்த்தக நிலவரப்படி அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு 61.70 ரூபாயாக உள்ளது.

மேலும் இந்திய சந்தை தவிர உலக சந்தைகள் அனைத்தும் வியாழக்கிழமை சரிவிலேயே முடிவடைந்துள்ளது. இதில் குறிப்பாக ஹாங்காங், ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் அனைத்தும் சரிவிலேயே முடிவடைந்துள்ளது. மேலும் ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் யு.கே சந்தைகள் சிரிவிலேயே வர்த்தகம் செய்யப்படுவது குறிப்பிடதக்கது.
More From GoodReturns

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!



Click it and Unblock the Notifications