மும்பை: இந்தியாவில் மிகப்பெரிய விட்டுக்கடன் வழங்கும் நிறுவனமான ஹெச்.டி.எஃப்.சி நிறுவனம் 2014ஆம் நிதியாண்டின் 3வது காலாண்டில் 12 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
இந்தியாவில் 2வது மற்றும் 3வது கட்ட நகரங்களில் வீட்டுக் கடன்களுக்கு அதிகப்படியான தேவை இருந்ததால் இந்நிறுவனம் அதிகப்படியான வாடிக்கையாளர்களை ஈர்த்து சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து அதிகப்படியான லாபத்தை பெற்றுள்ளது.

இந்த முன்று மாத காலகட்டத்தில் இந்நிறுவனம் 1,425 கோடி ரூபாய் லாபமாக பெற்றுள்ளது, கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் இதன் அளவு 1,277 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது.
இக்காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 14 சதவீதம் உயர்ந்து 6,871 கோடி ரூபாயை எட்டியுள்ளது.
டிசம்பர் 31,2014 ஆம் ஆண்டின் கணக்கின் படி இந்நிறுவனத்தின் கடன் அளவு 2,19,951 கோடி ரூபாயாக இருந்தது.
மேலும் ஹெச்.டி.எஃப்.சி நிறுவனம் மட்டும் அல்லாமல் வீட்டுக்கடன் அளிக்கும் அனைத்து நிறுவனங்களுமே இரண்டு இலக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதில் இந்தியாபுல்ஸ் நிறுவனம் 21 சதவீதமும், திவான் ஹவுசிங் நிறுவனம் 16 சதவீதமும், எல்.ஐ.சி ஹவுசிங் நிறுவனம் 6 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications