மும்பை: வெள்ளிக்கிழமை வர்த்தகம் துவக்கம் முதலே மும்பை பங்குச் சந்தையில் 29,844.16 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை எட்டி, சில நிமிடங்களில் சென்செக்ஸ் தொடர்ந்து சரிய துவங்கியது.
பாங்க் ஆஃப் பரோடா வங்கியின் காலாண்டு முடிவுகள் வெளியான சில மணிநேரங்களில் இந்தியாவின் பொது மற்றும் தனியார் வங்கி நிறுவனங்களின் பங்குகள் மிகப் பெரிய சரிவை சந்திக்க நேரிட்டது. இன்று சரிவை சந்தித்த நிறுவனங்களில் ஐசிஐசிஐ வங்கி, ஹெச்.டி.எஃப்.சி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, பாங்க் ஆஃப் பரோடா போன்ற வங்கிகளும் அடக்கம்.

மும்பை பங்குச்சந்தையை போலவே நிஃப்டியும் 143.45 புள்ளிகள் சரிந்து 8,808.90 புள்ளிகள் என்ற நிலையை அடைந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் லாபடைந்த நிறுவனங்கள் பட்டியலில் ஹிந்துஸ்தான் கட்டுமான நிறுவனம், HDIL நிறுவனம், ஜிஎம்ஆர் இன்ஃபரா, ஜேபி அசோசியேட்ஸ் போன்ற கட்டுமான நிறுவனங்களே அதிகளவிலான லாபத்தை சந்தித்தது. இது தவிர பெல் மற்றும் என்.டி.பி.சி ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் உயர்ந்தது.

நஷ்டமடைந்த நிறுவனங்களில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (4.3%) மற்றும் டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் நிறுவனத்தின் பங்குகளும் சரிந்தது.
வங்கித்துறை பங்குகளில் இன்று பேங்க் ஆப் பரோடா 10.78 சதவீத சரிவையும், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி பங்குகள் 5.80 சதவீத சரிவையும், எஸ்.பி.ஐ. பங்குகள் 5.46 சதவீத சரிவையும், எச்.டி.எப்.சி. பங்குகள் 3.99 சதவீத சரிவையும் சந்தித்தன.
ஐசிஐசிஐ வங்கி இன்று காலை தனது 3ஆம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது, இந்நிறுவனம் சந்தையின் கணிப்புகளை தவரவிட்டாலும் கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் 14 சதவீத வளர்ச்சியை எட்டி 2,889 கோடி ரூபாய் லாபத்தை அடைந்தள்ளது.


Click it and Unblock the Notifications