மும்பை: மும்பை பங்குச்சந்தை 30,000 புள்ளிகளை எட்டும் நிலையில் சில்லறை முதலீட்டாளர்கள் தங்களது இருப்பில் இருக்கும் பங்குகளை லாப நோக்குடன் அதிகளவில் விற்று வருகின்றனர். அதன் மூலம் இன்று காலை வர்த்தகம் துவக்கம் முதலே பங்குச்சந்தையில் 200 புள்ளிகள் வரை சரிந்தது.
மும்பை பங்குச்சந்தை போல நிப்டியும் இன்று காலை வர்த்தகத்தில் 34 புள்ளிகள் சரிந்தது.
மேலும் மதியவேலையில் மும்பை பங்குச்சந்தை 20 புள்ளிகள் வரை உயர்ந்து மீண்டும் சரிவை தழுவியது குறிப்பிடதக்கது.
அனைத்து துறைகளும் பாதிப்பு
இன்றைய வர்த்தகத்தில் சில்லறை முதலீட்டாளர்கள் லாப நோக்குடன் தங்களின் இருப்பில் இருக்கும் முக்கிய துறைகளின் பங்குகளையும் அதிகளவில் விற்றுள்ளனர். இதில் வங்கி, அரசு நிறுவனங்கள், உலோக நிறுவனங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயும் நிறுவனங்கள் மற்றும் எஃப்.எம்.ஜி.சி ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் விற்கப்பட்டுள்ளது.
பிற காரணங்கள்
பங்குச்சந்தையில் ஏற்பட்டு இருக்கும் சரிவிற்கு சில்லறை முதலீட்டாளர்கள் மட்டும் காரணம் இல்லை, ஆசிய சந்தைகளில் நிலவும் மந்தமான வர்த்தகம், அமெரிக்காவின் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள சரிவின் காரணமாக அமெரிக்க பங்குசந்தையிலும் வர்த்தகம் சரிந்துள்ளது.
ரிசர்வ் வங்கி
மேலும் ரிசர்வ் வங்கியின் 2014-15ஆம் நிதியாண்டின் 6வது இருமாத மறுஆய்வு கொள்கையின் காரணமாகவும் இன்று பங்குச்சந்தை மந்த நிலையில் உள்ளது.
லாபகரமான நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் லாபகரமான நிறுவனங்களாக விப்ரோ, டிசிஎஸ், இன்போசிஸ், சன் பார்மா, மாருதி, ஆக்சிஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ் மற்றும் டாடா பவர் ஆகியன உள்ளது.
நஷ்டம் அடைந்த நிறுவனங்கள்
பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, கோல் இந்தியா, ஐடிசி, ஹெச்டிஎஃப்சி. ஹிரோ மோட்டோ கார்ப், எஸ்பிஐ ஆகிய நிறுவன உள்ளது.


Click it and Unblock the Notifications