இந்திய ரயில்வே: ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் கேஷ் ஆன் டெலிவரி திட்டம்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ஆன்லைன் ஷாப்பிங்கில் சட்டை, காலானிகளை வாங்குவது போல இப்போது ரயில் டிக்கெட்டுகளையும் கேஷ் ஆன் டெலிவரி முறையில் பெறலாம்.

 

முதன் முறையாக இந்தியன் ரயில்வே துறையின் கிளை நிறுவனமான IRCTC ரயில்வே முன்பதிவில் கேஷ் ஆன் டெலிவரி முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

அனைவருக்கும் சேவை

அனைவருக்கும் சேவை

இச்சேவை முற்றிலும், வங்கி கிரேடிட் கார்டு மற்றும் இணையதள வங்கி சேவை கிடைக்க பெறாதவர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தின் மூலம் பல தரப்பு மக்கள் நன்மை அடைவார்கள் என இத்துறை தெரிவித்துள்ளது.

டிக்கெட் முன்பதிவு

டிக்கெட் முன்பதிவு

வாடிக்கையாளர் ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொண்டு டிக்கெட் வாடிக்கையாளர் கையில் கிடைத்தவுடன் பணத்தை செலுத்தினால் போதும் என IRCTC நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒரு தெரிவித்தார்.

பைலட் முறை

பைலட் முறை

மேலும் இத்திட்டம் இந்தியாவில் பைலட் முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை முதல்கட்டமாக 200 இந்திய நகரங்களில் செயல்படுத்த இத்துறை முடிவு செய்துள்ளது.

5 நாள்
 

5 நாள்

பயணிகள் தங்களுக்கான பயணத்தை கேஷ் ஆன் டெலிவரி மூலம் பெற 5 நாட்களுக்கு முன் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் பயணிகள் டிக்கெடிற்காக ரயில்வே நிலையத்தில் காத்துக்கிடக்க வேண்டிய அவசியம் இல்லை.

டெலிவரி கட்டணம்

டெலிவரி கட்டணம்

IRCTC நிறுவனத்தின் கேஷ் ஆன் டெலிவரி திட்டத்தில், ஸ்லீப்பர் கிளாஸ் டிக்கெட்டை முன்பதிவு செய்ய 40 ரூபாயும், ஏசி கிளாஸ் டிக்கெட் முன்பதிவிற்கு 60 ரூபாய் கூடுதல் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.

குட்ரிட்டன்ஸ்

குட்ரிட்டன்ஸ்

இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Now, book train ticket online, pay on delivery

Just like your shoes or hair dryer, you can now order your train ticket to be sent home on "cash-on-delivery" mode.
Story first published: Tuesday, February 3, 2015, 12:07 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X