பெங்களுரூ: இந்திய சந்தையை நம்மவருக்கு சிறப்பாக பயன்படுத்த தெரிகிறதோ இல்லையோ இந்த வெளிநாட்டவர்களுக்கு நன்றாக தெரிகிறது.
கடந்த 5 வருடத்தில் பெங்களூரில் மட்டும் சுமார் 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் புதிய நிறுவனங்களை துவங்கியுள்ளனர். பெரு நிறுவனங்களை விட சிறு நிறுவனங்களின் தாக்கம் அதிகம் என்பதை நாம் முதலில் உணர வேண்டும்... இதற்கு உதாரணம் பேஸ்புக், டிவிட்டர், பிளிப்கார்ட் போன்ற பல...
சீன் பலாக்ஸ்வெட்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவின், மேனேஜ்மென்ட் மற்றும் அட்வான்ஸ் புரோட்டோடைப்பிங் பிரிவின் தலைவரான சீன் பலாக்ஸ்வெட், அதிகப்படியான சம்பளம் கிடைக்கும் தனது வேலையை விட்டுவிட்டு 2004ஆம் ஆண்டு இந்தியா வந்தார்.
பாபா ஜாப்ஸ்
இந்தியா வந்த இவர் தமிழ் பெண் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டு இரண்டாம் தர வேலைகள் அதாவது ப்ளு காலர் ஜாப்ஸ் எனப்படும் டிரைவர்கள், வீட்டு வேலையாட்கள், சமையல் செய்பவர்களுக்காக தனி வேலைவாய்ப்பு இணைய தளத்தை திறந்துள்ளார்.
இந்தியாவில் வர்த்தகம்
இன்றளவும் சீன் பலாக்ஸ்வெட் இந்தியாவில் வர்த்தகம் துவங்கியது மிகவும் சரியான முடிவு என தெரிவித்துள்ளார். மேலும் அவர் புதிய எண்ணங்கள் கொண்டு வரும் அனைவருக்கும் இந்திய சந்தை சிறப்பானது எனவும் தெரிவித்தார்.
ஜூம் கார்
க்ரேக் மோரான் மற்றும் டேவிட் பேக் 2013ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வந்து செல்ப்-டிரைவிங் கார் ரென்டல் நிறுவனத்தை துவங்கினார்கள். இந்நிறுவனத்தின் பெயர் தான் ஜூம் கார். வெறும் 7 கார்களை வைத்து துவங்கிய இந்நிறுவனம் இன்று 250 கார்களை கொண்டு செயல்படுகிறது.
10 நகரங்கள்
இந்நிறுவனம் தற்போது பெங்களுரூ நகரத்தை தலைமையிடமாக கொண்டு பெங்களுரூ மற்றும் பூனேவில் செயல்படுகிறது. மேலும் இந்நிறுவனத்தி 10 நகரங்களுக்கு விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு வருவதாக இவர்கள் தெரிவிக்கின்றன.
ஜிப் டயல்
எங்கேயோ கேட்ட நிறுவன பெயராக உள்ளதா... சமீபத்தில் சமுக வளைதள நிறுவனமான டிவிட்டர் இந்தியாவில் இருந்து முதல் முறையாக கையகப்படுத்திய நிறுவனம் தான் அது.
வாலரி வாக்நர்
இந்தியாவில் மிஸ்டு கால் மூலம் சேவை அளிக்கலாம் என்பதை உணர்ந்து வாலரி வாக்நர் பெங்களுரில் ஜிப் டயல் நிறுவனத்தை துவங்கினார். உண்மையில் இந்நிறுவனம் குறைந்த காலத்தில் அதிகப்படியான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.
இந்தியா
இதன் மூலம் இந்தியாவில் மீண்டும் 1947 வருமோ என்று நினைப்பதா, இல்லை நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பும் பொருளாதாரம் உயர்கிறது என்று நினைப்பதா என்று தெரியவில்லை. இந்தியாவில் இருந்து வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு இரவும் பகலுமாக வேலை செய்கிறோம். நமக்கா எப்போது வேலை செய்யப்போகிறோம்... எல்லாம் நன்மைகே என்று சொல்லிவிட்ட அடுத்த வேலையை பார்த்துவிட்டு போக வேண்டியது தான்.
குட்ரிட்டன்ஸ்
இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள்+ போன்ற சமுக வளைதளங்கள் மூலம் இணைந்திடலாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications