2 நாள் சரிவில் இருந்து மீண்டது தங்கம்!! கிராமுக்கு 12 ரூபாய் அதிகரிப்பு..
சென்னை: சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான வர்த்தகம் குறைந்ததை அடுத்து கடந்த ஒரு வார காலத்தில் தங்கம் விலையில் மிகப்பெரிய அளவிலான வித்தியாசம் கண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை சரிந்த நிலையில் இன்று ஆபரண தங்கம் கிராமிற்கு 12 ரூபாய் அதிகரித்துள்ளது.
ஆனால் வெள்ளி கிலோவிற்கு 28 ரூபாய் சரிந்து 1 கிலோ வெள்ளி 38,516 ரூபாயாக உள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் 24 கேரட் ஒரு கிராம் தங்கம் 12 ரூபாய் அதிகரித்து 2,814 ரூபாய்க்கும், 22 கேரட் ஆபரண தங்கம் 12 ரூபாய் அதிகரித்து 2,631 ரூபாய்க்கும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்
சென்னை : ரூ.26,310
ஹைதராபாத் : ரூ.26,290
பெங்களூரு : ரூ.26,280
கொல்கத்தா : ரூ.26,270
டெல்லி : ரூ.26,240
மும்பை : ரூ.26,260


Click it and Unblock the Notifications