டெல்லி: நாட்டில் தங்கம் இறக்குமதி குறைந்து வருவதை கருத்தில் கொண்டு பிப்.28ஆம் தேதி வெளிவர உள்ள பட்ஜெட்டில், தங்கத்திற்கான இறக்குமதி வரியை 2 முதல் 4 சதவீதம் வரை குறைக்க அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதன் மூலம் ஆபரணங்கள் மற்றும் விலை உயர்ந்த கற்களின் உற்பத்தியும், ஏற்றுமதியும் அதிகரிக்கும் என்பது மத்திய அரசின் நம்பிக்கை.
இத்துறைக்கு தற்போது உள்ள 10 சதவீத சுங்க வரியில் 2 சதவீதத்தை குறைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிதியமைச்சகம்
'தங்கம் இறக்குமதி செய்யப்படுவது தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் விலை உயர்ந்த கற்கள் மற்றும் ஆபரணங்களின் பங்கு மிகவும் அதிகமானதாக உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, நாங்கள் இறக்குமதி வரியைக் குறைக்க உள்ளோம். ஆனால், இதற்கான முடிவை நிதியமைச்சர் தான் எடுக்க வேண்டும்' என்று நிதியமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இறக்குமதி வரி
இதன் மூலம் மத்திய அரசு 2 முதல் 4 சதவீதமளவிற்கு தங்கம் மீதான இறக்குமதி வரி குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்மலா சீத்தாராமன்
இதற்கேற்றார் போலவே, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சரான நிர்மலா சீத்தாராமன் அவர்கள், விலை உயர்ந்த கற்கள் மற்றும் ஆபரண துறைக்கு பட்ஜெட்டில் சலுகைகள் கிடைக்கும் என கடந்த மாதம் தெரிவித்துள்ளார்.
வர்த்தகத் துறை செயளாலர்
இந்த துறையில் இறக்குமதி வரி தொடர்பான பல்வேறு விஷயங்களும் அண்மையில் நடந்த 'மேக் இன் இந்தியா' கருத்தரங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டது. இது குறித்து வர்த்தகத் துறை செயளாலராக இருக்கும் இராஜீவ் கேர் அவர்கள், நாட்டின் பிரதமர் திரு.நரேந்திர மோடிக்கு விளக்கப் படம் மூலம் வளக்கினார்.
இறக்குமதி குறைவு
நவம்பர் மாதத்தில் 150 டன்களாக இருந்த தங்க இறக்குமதி டிசம்பர் மாதத்தில் வெகுவேகமாக 30 டன்கள் குறைந்து விட்டது. அதே போல விலை உயர்ந்த கற்கள் மற்றும் ஆபரணங்களின் ஏற்றுமதியும் ஒவ்வொரு ஆண்டும் 1.2 சதவீதம் குறைந்து டிசம்பர் மாதத்தில் அமெரிக்க டாலர் மதிப்பீடில் 2.66 பில்லியன் டாலராக குறைந்து விட்டது.
'மேக் இன் இந்தியா'
'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் கண்டறியப்பட்டுள்ள 25 முக்கியமான துறைகளில் ஒன்றாக இத்துறை உள்ளது. உள்நாடு மற்றும் அன்னிய மூலதனங்களை கவர்ந்திழுத்து உற்பத்தி துறையை ஊக்குவிக்குவதும் மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்குவதும் தான் இந்த திட்டத்தின் குறிக்கோளாக உள்ளது.
தங்க கடத்தல்
இந்த சுங்க வரி குறைக்கப்பட்டதால், விலை உயர்ந்த இந்த உலோகத்தை கடத்துவது குறையும் என்று அகில இந்திய ஜெம்ஸ் மற்றும் ஆபரண கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!



Click it and Unblock the Notifications