தங்கம் விலை கிராமிற்கு 60 ரூபாய் உயர்வு!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: சீனாவின் பொருளாதார நிலை அறிக்கை அசிய சந்தையை அதிகளவில் பாதித்துள்ள நிலையில் மூன்று வார சரிவில் இருந்த தங்கம் விலையில் இன்று 0.3 சதவீதம் உயர்ந்துள்ளது.

தங்க உயர்விற்கு முக்கிய காரணம், சர்வதேச சந்தையின் மந்தமான பொருளாதார நிலையில் பங்குகளில் முதலீடு அளவு குறைந்ததால் முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளி போன்ற உலோகத்தில் அதிகளவில் முதலீடு செய்கின்றனர். இதுவே இத்தகைய உயர்விற்கு முக்கிய காரணம் என ஹாங்காங் நாட்டின் புல்லியன் வர்த்தக நிறுவனத்தின் தலைவர் ரொனால்ட் தெரிவித்துள்ளார்.

தங்கம் விலை கிராமிற்கு 60 ரூபாய் உயர்வு!!

சர்வதேச சந்தையில் இன்று தங்கம் விலை 0.3 சதவீதம் உயர்ந்து ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,236.38 டாலராக வர்த்தகம் செய்யப்படுகிறது. இந்திய சந்தையில் இன்று காலை நிலவரப்படி 24 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 63 ரூபாய் உயர்ந்து 2,773 ரூபாயாக உள்ளது.

சனிக்கிழமை சந்தை முடிவில் 24 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 2,710 ரூபாயாக இருந்தது. மேலும் இந்த விலை மூன்று வார சரிவு என்பது குறிப்பிடதக்கது.

கடந்த ஒரு வருடத்தில் 24 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை அதிகப்படியாக கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி 3,082 ரூபாயாகவும், குறைவாக டிசம்பர் 1ஆம் தேதி 2,580 ரூபாயாக இருந்தது.

சீனாவின் பொருளாதார அறிக்கை உலகின் இரண்டாவது மிகப்பெரிய சந்தையாக கருதப்படும் ஆசியா சந்தையை மந்த நிலைக்கு தள்ளியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold gains on weaker Asian shares

Gold edged higher on Monday, as Asian equity markets fell on disappointing Chinese economic data, but the metal failed to make much headway from a three-week low in the previous session due to worries over U.S. interest rates.
Story first published: Monday, February 9, 2015, 11:52 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X