டெல்லி தேர்தல் கணிப்புகள் எதிரொலி: ஒரே நாளில் சென்செக்ஸ் 490 புள்ளிகள் சரிவு..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ஆசிய சந்தையில் நிலவும் மந்த நிலையாலும், நாட்டின் தலைநகர் டெல்லியில் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் 41 இடங்களில் வெற்றி பெறுவார்கள் என்ற கணிப்புகளின் முடிவுகள் காரணமாக மும்பை பங்குச் சந்தையில் இன்று சென்செக்ஸ் 340 புள்ளிகள் வரை சரிந்தது.

இன்று காலை வர்த்தக துவக்கம் முதலே மும்பை பங்குச்சந்தை 123 புள்ளிகள் சரிவுடன் துவங்கியது. இதன் பின் 11 மணியளவில் 325 புள்ளிகள் சரிந்து 28,392.39 புள்ளிகளை எட்டியது.

டெல்லி தேர்தல் கணிப்புகள் எதிரொலி: ஒரே நாளில் சென்செக்ஸ் 490 புள்ளிகள் சரிவு..

இதன் மூலம் சந்தையின் முக்கிய நிறவனங்களான ஸ்டேட் வங்கி, டிசிஎஸ், ஐடிசி, மாருதி, பெல், டாடா மோட்டார்ஸ், கோல் இந்தியா, பார்தி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி, டாடா ஸ்டீல், ஹீரோ மோட்டோ கார்ப், ஐசிஐசிஐ வங்கி ஆகியவை சரிவை கண்டது.

மும்பை பங்குச்சந்தையை போலவே நிஃப்டியும் வர்த்தகம் துவக்கம் முதலே சரிவுடன் துவங்கி நிஃப்டி 94 புள்ளிகள் வரை சரிந்தது 8,567.80 புள்ளிகளை எட்டியது. மேலும் கடந்த 6 நாட்களாக இந்திய பங்குச்சந்தை தொடர் சரிவை சந்தித்து வருவது குறிப்பிடதக்கது.

இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையில் 490 புள்ளிகள் சரிந்து 28,227.39 புள்ளிகளை அடைந்து. நிஃப்டியில் 132 புள்ளிகள் குறைந்து 8,526.35 புள்ளிகளை அடைந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex cracks nearly 340 points, Nifty drops below 8600

The S&P BSE Sensex plunged as much as 286 points in trade on Monday, tracking muted trend in other Asian markets, and after most exit polls on Saturday predicted an AAP win in the Delhi elections.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X