சென்னை: இரண்டு நாள் சரிவிற்கு பின், இந்திய புல்லியன் வர்த்தக சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலை 90 ரூபாய் உயர்ந்து காணப்பட்டது. இன்று சில்லறை விற்பனையாளர்களிடம் அதிகளவிலான தங்க விற்பனை செய்யப்பட்டதாலும், உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்ததாலும், தங்கம் விலை இன்று கிராமிற்கு 9 ரூபாய் உயர்ந்தது.

24 கேரட் 10 கிராம் தங்கம் 90 ரூபாய் அதிகரித்து 27,880 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும் திருமண காலம் நெருங்கியுள்ளதால் தங்கம் மற்றும் வெள்ளியின் தேவை அதிகரித்துள்ளது இதன் மூலம் வெள்ளியின் விலையும் கிலோவிற்கு 570 ரூபாய் அதிகரித்து 38,100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
சிங்கப்பூரில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 0.6 சதவீதம் அதிகரித்து 1,245.98 டாலருக்கு விற்கப்படுகிறது, வெள்ளியின் விலையும் இச்சந்தையில் 0.4 சதவீதம் அதிகரித்து ஒரு அவுன்ஸ் வெள்ளி 17.06 டாலராக உள்ளது.
மேலும் கடந்த இரு நாள் வர்த்தகத்தில் தங்கம் விலையில் 510 ரூபாய் சரிவு ஏறப்பட்டது.


Click it and Unblock the Notifications