மும்பை: நாட்டின் தலைநகரில் நடந்து முடிந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில் இத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியினர் முன்னணியில் உள்ளனர். இந்நிலையில் மும்பை பங்குச் சந்தை இன்று 70 புள்ளிகள் உயர்வுடன் துவங்கியது. மேலும் இத்தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கி நேற்று சென்செக்ஸ் 490 புள்ளிகள் வரை சரிந்தது.

இந்நிலையில் நேற்று சந்தையில் சரிவை சந்தித்த அனைத்து நிறுவனங்களும் இன்று உயர்வுடன் காணப்படுகிறது. குறிப்பாக பல நாட்களாக சரிவில் சிக்கித் தவித்த வங்கித்துறை பங்குகள் இன்று உயர்வுடன் காணப்படுகிறது.
மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 167.14 புள்ளிகள் உயர்ந்து 28394.53 புள்ளிகளை எட்டியுள்ளது. அதேபோல் நிஃப்டியும் 54.55 புள்ளிகள் உயர்ந்து 8580.90 புள்ளிகளை அடைந்துள்ளது.
இன்று சந்தையில் பல ஏற்ற இறக்கம் காணப்பட்டது, 11.30 மணியளவில் சந்தை 400 புள்ளிகள் வரை உயர்ந்தது, பின்பு 2 மணியளவில் 120 புள்ளிகள் வரை சரிவு காணப்பட்டது. மேலும் இன்றைய சந்தை முடியும் வேலையில் நேற்றைய சந்தை முடிவில் இருந்து மும்பை பங்குச்சந்தை 120 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது.
நேற்று ஒரு நாளில் மட்டும் மும்பை பங்குச்சந்தையில் 490 புள்ளிகள் வரை சரிந்தது குறிப்பிடதக்கது. மேலும் இந்திய சந்தையை போலவே ஆசிய சந்தையில் ஜப்பான், சீனா ஆகிய சந்தைகளும் இன்று உயர்வுடன் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications