மும்பை: டெல்லி தேர்தல் முடிவுகளையொட்டி நேற்று மும்பை பங்குச் சந்தை பல ஏற்ற இறக்கங்கள் சந்தித்தது. ஆனால் இன்று சில்லறை முதலீட்டாளர்கள் மத்திய பட்ஜெட்டை எதிர்நோக்கி குறிப்பிட்ட சில முக்கிய நிறுவனகளின் பங்குகளில் மட்டுமே வர்த்தகம் செய்கின்றனர்.
இதன் மூலம் காலை வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 134 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.
சந்தை முடிவில் மும்பை பங்குச்சந்தை 178.35 புள்ளிகள் உயர்ந்தது, நிஃப்டி 61.85 புள்ளிகள் உயர்ந்து 8,627.40 புள்ளிகளை எட்டியது.
மும்பை பங்குச்சந்தை
இன்று காலை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை 134.85 புள்ளிகள் உயர்ந்து 28,490.47 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது. மேலும் சில்லறை முதலீட்டாளர்கள் கேப்பிடல் கூட்ஸ், வங்கி, சுகாதாரம், பவர், ஆட்டோமொபைல் மற்றும் உலோக நிறுவனங்கள் பங்குகளில் அதிகளிவல் முதலீடு செய்கின்றனர்.
டெல்லி தேர்தல் முடிவுகள்
செவ்வாய்க்கிழமை வர்த்தகம் டெல்லி தேர்தல் முடிவுகளையொட்டி மந்தமாகவே இருந்தது. இதன் காரணமாக சென்செக்ஸ் 128.33 புள்ளிகள் மட்டுமே உயர்ந்தது.
நிஃப்டி
இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி 47.10 புள்ளிகள் உயர்ந்து 8,612.65 புள்ளிகளை அடைந்தது. இதன் மூலம் நிஃப்டி மீண்டும் 8600 புள்ளிகளை எட்டியுள்ளது.
முதலீட்டாளர்கள்
சில்லறை முதலீட்டாளர்கள் இன்று காலை முதல் மத்திய பட்ஜெட்டை எதிர்நோக்கி லாப அளவை அதிகரித்துக்கொள்ள குறிப்பிட்ட சில நிறுவனங்களின் பங்குகளில் மட்டுமே முதலீடு செய்து வருகின்றனர்.
உலக சந்தை
ஆசிய சந்தைகளில் ஹாங்காங் சந்தை 0.61 சதவீதம் உயர்வுடன் காணப்பட்டது. ஜாப்பான சந்தை பொது விடுமுறையின் காரணமாக பங்குச்சந்தை செயல்படவில்லை. நேற்று அமெரிக்க டாவ் ஜோன்ஸ் சந்தை குறியீடு 0.79 சதவீத உயர்வுடன் முடிவடைந்தது.


Click it and Unblock the Notifications