சென்னை: உலக சந்தையில் தங்கம் மீதான வர்த்தகம் குறைந்ததால் தங்கம் விலை கடந்த 4 நாட்களாக குறைந்து வருகிறது. மேலும் கடந்த முன்று நாட்களில் தங்கம் விலையில் பெரிய அளவில் சரிவு இல்லை என்றாலும், இன்றைய வர்த்தகத்தில் தங்கம் விலை கிராமிற்கு 20 ரூபாய் சரிந்து 5 வார விலை சரிவை பதிவுசெய்துள்ளது.
இந்த விலை சரிவிற்கு முக்கிய காரணமாக ஐரோப்பிய சந்தையில் நிலவும் பணசுருக்கம் என புல்லியன் சந்தை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
தங்கம் விலை
இன்றைய தங்க வர்த்தக சந்தையில் 24 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 20 ரூபாய் சரிந்து 2751 ரூபாய்க்கு குறைந்துள்ளது. அதேபோல் 22 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 19 ரூபாய் சரிந்து 2571 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
வெள்ளி
தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் கிலோவிற்கு 750 ரூபாய் குறைந்து 37570.00 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
டாலர் மதிப்பு
தங்கம், வெள்ளியை போலவே அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயும் இன்று சரிவை தழுவியுள்ளது. நாணய சந்தையில் டாலருக்கு எதிரான இந்தியா ரூபாய் மதிப்பு 0.17 பைசா சரிந்து 62.42 ரூபாயாக உள்ளது.
இனி 8 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரத்தை இந்தியாவின் முக்கிய நகர வாரியாக பார்க்கலாம்.
ஹைதராபாத்
ஹைதராபாதில் 10 கிராம் தங்கம் ரூ.20757
பெங்களூரு
பெங்களூரில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.20,749
கொல்கத்தா
கொல்கத்தாவில் 10 கிராம் தங்கம் ரூ.20,717
டெல்லி
தலைநகரமான டெல்லியில் 10 கிராம் தங்கம் ரூ.20,653
சென்னை
நம்ம சென்னையில் 10 கிராம் தங்கம் ரூ.20709
மும்பை
மும்பையில் 10 கிராம் தங்கம் ரூ.20,653
குட்ரிட்டன்ஸ்
இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள்+ போன்ற சமுக வளைதளங்கள் மூலம் இணைந்திடலாம்.


Click it and Unblock the Notifications