மும்பை: டெல்லி தேர்தல் முடிவுகள் மற்றும் பட்ஜெட் அலையால் மும்பை பங்குச் சந்தை கடந்த இரு நாட்களாக உயர்வுடன் காணப்பட்டு வரும் நிலையில், இன்று காலை வர்த்தகத்தில் உயர்வுடன் துவங்கிய மும்பை பங்குச்சந்தை சில நிமிடங்களில் சரிவு பாதையை நோக்கிய சென்றது.
இதன் மூலம் மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வரத்தகத்தில் சென்செக்ஸ் சுமார் 114 புள்ளிகள் சரிந்தது 28,434.94 புள்ளிகளை எட்டியது.

நிஃப்டியும் மும்பை பங்குச்சந்தையை போலவே உயர்வுடன் துவங்கி 19.55 புள்ளிகள் சரிந்தது 8,607.85 புள்ளிகளை எட்டியது.
இந்நிலையில் வங்கித்துறை பங்குகள்கள் 150 புள்ளிகள் வரை சரிந்துள்ளது இதில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா 1.26 சதவீதம் அளவு சரிந்துள்ளது. இதேபோல் ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகிய வங்கிகள் சரிவித்துள்ளது.
மேலும் பார்மா நிறுவனங்களான சிப்லா, டாக்டர் ரெட்டி போன்ற நிறுவனங்களும், ஐடி நிறுவனங்களான விப்ரோ, இன்போசிஸ், டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள் அனைத்தும் உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications